பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

குப் பதினான்கு சந்தி விளக்குகளுக்கும்”[1] இந்நில் வருவாய் பயன்படுத்தப்பெற்றது (175 of 1929).

முதலாம் இராசராசனது 3-ஆம் ஆட்சியாண்டில் விநயாபரணவிண்ணகர்[2] எம்பெருமான் கோயிலில் முன்னர் உள்ள மண்டபத்தில் சபை கூடியது; இத்தலைவனிடம் இருந்து அச்சபையார் 2000 கழஞ்சு (பொன்னை) இறைகாவலாகப்[3] பெற்றுக் கொண்டு 15 வேலி நிலத்தை இறையிலியாக்கிக் கோவிலுக்கு அளித்தனர்.

இனி, இவ்வரசனது 7-ஆம் ஆட்சியாண்டில் இத் தலைவன் இத்திருக்கோயிலில் கூத்தப்பெருமானையும், உமாபட்டாலகியையும் எழுந்தருள்வித்து அவர்களுக்குப் பொன் அணிகலன்களை யளித்துள்ளான் என்று ஒரு கல்லெழுத்து (163 of 1929) நுவல்கின்றது.

திருவிளக்குத் திருத்தொண்டு

பரகேசரிபன்மரது[4] 10 ஆவது ஆண்டில் ஒரு விளக்கு எரிக்கவும் (170 of 1929), 12 ஆவது ஆண்டில்


  1. தருமபுர ஆதீனப் பதிப்பு-சம்பந்தர் தேவாரம்-3 ஆம் திருமுறை-கல்வெட்டுக் குறிப்பு-திரு. சு. வாண்டையார்.
  2. விண்ணகர் - திருமால் கோயில்.
  3. இறைகாவல்-பின்னால் செலுத்தவேண்டிய வரிக்காக மொத்தமாகச் செலுத்தும் பணம் (S.I.T.1. பாகம் 3, பக்கம் 1 40 1 ). பக்கம் 5, குறிப்பு 16 காண்க.
  4. பரகேசரி என்று மட்டும் உள்ள கல்வெட்டுக்களிலும், பரகேசரி உத்தமசோழன் என்றுள்ள கல்லெழுத்துக்களிலும் அம்பலவன் பழுவூர் நக்கன் குறிக்கப் பெற்றுள்ளான். ஆகவே இத்தலைவனைக் குறித்துள்ள பரகேசரிவர்மனது கல்வெட்டுக்கள் உத்தமசோழன் காலத்தவை என்பது திண்ணம்.