பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பெற்ற மணிமங்கல சபையார் சாஸசனத்தில் (s. I. I., Vol. II Part No. 29) பழுவூர்நக்கப்புத்தேரி என்று ஓரேரி குறிக்கப்பெற்றுள்ளது. தொண்டைமண்டலத்து மணிமங்கலத்து இவ்வேரி இருந்ததாகக் காணப்பெறினும், இவ்வேரிக்குப் பெயர் இவன் பெயரையொட்டி யமைந்ததாகவே கொள்ளலாம்.

இவன் மனைவியர்

இவ்வதிகாரிக்கு இருமனைவியர் இருந்தனர் என்று இரண்டு கல்லெழுத்துக்களினின்றும் அறியப் பெறுகின்றது. ஒருவர் அபராஜிதன் செய்யவாய்மணி என்பவர்; மற்றாெருவர் சிங்கபன்மன் காஞ்சி அக்கன் என்பவராவர். (அக்கன் என்றமையால் இவரே மூத்த மனைவியாதலும் கூடும்). இவ்விருவரும் விசய மங்கைக் கோயிலில் விளக்கு எரிக்க ஆடுகளை யளித்துத் தம் புகழை நிறுவியுள்ளார்கள்.

புறவுரை

நெடுவாயில் தானசாஸனத்தில் ’அறம் மறவற்க; அறமல்லது துணையில்லை’ என்றுள்ள அறிவுரை கவனிக் கற்பாலது. இவ்வூரில் திருத்தொண்டத்தொகையான் திருமடம்[1] என்று ஒரு மடம் இருந்தது. மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் ஒரு கல்வெட்டுத் தொடக்கத்தில்[2] ‘வாழ்க அந்தணர்‘ என்ற திருப்பாடல் எழுதப் பெற்றுள்ளது.


  1. இவ்வாசிரியர் வெளியிட்ட ‘’இலக்கியக்கேணி‘’ என்ற நூலில் ‘’திருத்தொண்டத் தொகை‘’ என்ற கட்டுரை காண்க.
  2. 1932 Of 1939.

2