பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனுக்கு இவன் முதன் மகனாவான். இவனது கல்லெழுத்துக்கள் தஞ்சை, திருச்சி, தென்னாற்காடு மாவட்டங்களில் கிடைத்துள்ளன; 5 ஆவது ஆட்சியாண்டு வரை காணப்பெறுகின்றன. இவன் 'பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்' எனப்பெறுகிறான். இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனால் கி. பி. 966ல் வெல்லப்பெற்ற வீரபாண்டியனே இவனால் வெல்லப்பட்ட பாண்டியனாதல் கூடும். இவ்வாதித்த கரிகாலன் தன் தந்தையின் ஆட்சிக்காலத்திலே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான். இவ்வாதித்தகரிகாலனது ஆட்சியாண்டுகள் குறிக்கப்பெற்ற கல்லெழுத்துக்களினின்று சிற்றிங்கணுடையானின் சிறந்த தொண்டுகளைக் காண்பாம்.

திருவிடைமருதூர் கல்லெழுத்து[1]

திருவிடைமருத்ல ஆழ்வார் ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிங்க ணுடையான் கோயில் மயிலை பராந்தக மூவேந்தவேளானும், திரை மூர்ச்சபையாரும் திருவிடைமருகில் நகரத்தாரும், தேவகன்மிகளும் நாடக சாலையில் கூட்டம் கூடினர். அவ்வூரில் சித்தி மறைக் காடானான திருவெள்ளறைச் சாக்கை என்ற ஆடல் வல்லான் ஒருவன் இருந்தான். அவன் தைப்பூசத் திரு நாளிலும், தீர்த்தமாடின பிற்றைநாள் தொடங்கி மூன்று நாட்களும், வைகாசித் திருவாதிரையின் பின் பிற்றை நாள் தொடங்சி மூன்று நாட்களும் ஆக ஏழு தடவை


  1. 154 of 1895. S. I.I. Vol V No 718 ; Vol III 202.