பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

இவர் காலம் கி. பி. 620 - 680 என்பர். குமாரிலபட்டரின் கொள்கைகளுக்கு மாறுபாடாக பிராபாகரமிச்ரர் சபரபாஷ்யத்துக்கு இரண்டு உரை எழுதினர். முதலுரை ஆயிரம் கிரந்தமும், இரண்டாமுரை பன்னிராயிரம் கிரந்தமும் உடையது. அவற்றிற்கு விவரணம் நிபந்தனம் எனப் பெயர். சாலிகநாதர் என்பார் விவரணம் நிபந்தனம் ஆகிய இரண்டிற்கும் உரை எழுதினர். சாலிகநாதர் காலம் கி. பி. 690-760. குமாரில பட்டரின் மதம் எவ்வாறு பரவியதோ அவ்வாறு பிரபாகர மதம் பரவவில்லை.”

எனவே பூர்வமீமாம்ஸ்மதமே பிரபாகரரால் விவரிக்கப் பெற்றது என்றும், அப்பிரபாகரரால் எழுதப்பெற்றவற்றை (பிரபாகர மதத்தை) விளக்குவதற்குத் திருக்குடந்தையில் நிபந்தம் அளிக்கப்பெற்றது என்றும் அறியப்பெறும். இதனான் சிற்றிங்கணுடையான் சமய அறிவு படைத்தவன் என்றும், சமய அறிவைப் பரப்புவதில் ஆர்வம்கொண்டு ஆவன செய்தான் என்றும் தெரியலாம்.

பிறாண்டும் பிராபாகரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருக்கோட்டியூர் என்ற ஊரில் முதலாம் இராசராசனது 11-ஆம் ஆட்சி யாண்டுக் கல்லெழுத்தொன்று,[1] திரைமூர் நாட்டுச் சாத்தமங்கலத்தவர் ஒருவர், பிராமணர் ஒருவரால் பிராபாகரம் வக்காணிக்கவும், விளக்கெரிக்கவும், நில தானம் செய்ததை உணர்த்துகின்றது. இதனாலும் சோழ நாட்டிலும் பிற இடங்களிலும் பிராபாகரம் பரவச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பெற்றன என்றும், சோழநாட்டவருள் வடமொழிவல்லார் அந்நாளில் பிராபாகரம் கற்று வல்லவராய் இருந்தனர். என்றும் அறியக்கிடக்கின்றது.


  1. 333 of 1923.