பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

ருத்ராக்ஷம் பொன்னின் சுரி கட்டிற்று ஒன்றும், நாண்படு கண்ணும் கொடுக்குவாயும் உள்பட நிறை கழஞ்சே 7 மஞ்சாடி; விலைகாசு 3.

வெண்ணி[1] நகரத்தார் கொடுத்தன

திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே மஞ்சாடியும் குன்றி; திருக்கம்பி ஒன்று, பொன் கழஞ்சே மஞ்சாடி: திரள்மணிவடம் ஒன்று, பொன் இருகழஞ்சே மஞ்சாடியும் குன்றி; திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடி, திருக்கைக் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 3 மஞ்சாடியும் குன்றி; திருக்காற்காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 3 மஞ்சாடியும் குன்றி; திருக்காற் காறை ஒன்று, பொன் 1 கழஞ்சே 4 மஞ்சாடியாக இரண்டிற்கு 3 கழஞ்சே 3 மஞ்சாடி.

2. நங்கை பரவையார் படிவம்

பதினறு விரல் உயரத்து இரண்டு திருக்கையுடையராகக் கனமாக எழுந்தருளுவிக்கப்பெற்றது; இவர் எழுந்தருளிநின்ற பத்மம் இருவிரலே இரண்டு தோரை உயரமுடையது; இதனேடுங் கூடச்செய்த பீடம் 6 விரலே 2 தோரை சம சதுரத்து மூவிரல் உயரமுடையது.

இவர்க்குப் பொய்கைநாடு கிழவன் கொடுத்தன

திருக்கைக்காறை ஒன்று, பொன் 1 கழஞ்சாக இரண்டினால் பொன் முக்கழஞ்சு; திருக்காற்காறை ஒன்று பொன் 1 கழஞ்சாக இரண்டினால் பொன் முக்கழஞ்சு; மோதிரம் ஒன்று, பொன் கழஞ்சே மஞ்சாடியும் குன்றி.


  1. இதுவும் இராசராசேச்சுரமுடையார் தேவதானம்; நித்த வினோதவளநாட்டது.