பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

ராகக் காணப்படுகிறது. மஞ்சிப் பயனாருடைய மனைவியின் பெயரில் கண்ட ‘அக்க’ என்ற பகுதியும் தெலுங்கில் தமக்கை என்ற பொருளது. மஞ்சிப் பயனாரும் தொண்டை மண்டலத்தில் நிலையாக வாழ்ந்தவர். இந் நாளிலும் மணிமங்கலத்தைச் சார்ந்த சிற்றூர்கள் பலவற்றிலும் தெலுங்க மொழி பேசும் அந்தணர் குடும்பங்கள் பல (இக்கட்டுரையாசிரியர் குடும்பம் உட்பட) இருக்கின்றன. எனவே மஞ்சிப் பயனார் தெலுங்க நாட்டினின்று போந்து தொண்டை நாட்டில் வாழ்ந்தவர் என்பது தெளிவு.

முடிப்புரை

முதலாம் இராசாதிராசன் கொப்பத்துப் போர்க்களத்தில் கி. பி. 1051-இல் இறந்து போனான். இரண்டாம் இராசேந்திர சோழன் அக்கொப்பத்துப் போரில் வாகை சூடினான். அவன் தம்பியாகிப வீரராசேந்திரனும் மேலைச் சளுக்கியர்களை ’’ஐம்மடி வெந் கொண்டவனுக’’க் கூறப்படுகிறான். இவ்வாறு 11-ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் நடைபெற்ற மேலைச் சளுக்கியப் போர்களில் செயங்கொண்ட சோழப் பிரமாதி ராசனும் அவன் தந்தை மஞ்சிப்பயனரான ஜெயசிம்ம குலாந்தகப்பிரம மாராயரும் பெரும் பங்கு கொண்டு வெற்றி பெற்றுச் சோழ அரசர்களது அன்புக்குரியராகிப் பேரும் புகழும் பெற்றுத் திகழ்ந்து கொடைக் குணம் மிக்குடையராய்த் திருமால் பக்தியில் சிறந்தவராய் வாழ்ந்தனர் என்பது கண் கூடு.