பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

இவன் தமையன்

தொண்டைமானுக்குத் தமையன் ஒருவன் இருந்தான். தொண்டைமான் கலிங்கத்தின்மேல் படையெடுத்துச் சென்றபோது இவன் தமையனும் துணைப்படைத் தலைவனாகச் சென்றானென்பது பின்வரும் கலிங்கத்துப் பரணித் தாழிசையாலறியலாம் :-

“தொண்டையர்க் கரசு முன்வரும் சுரவி
      துங்க வெள் விடை உயர்த்தகோன்
வண்டையர்க் கரசு பல்லவர்க் கரசு>
      மால் களிற்றின்மிசை கொள்ளவே.’’ (11-53)

இத்தாழிசையிலிருந்து இவன் தமையன் ’பல்லவர்க்கரசு’ என்ற பெயருடையவனென்றும், மிக்க வள்ளன்மை உடையவன் என்றும் அறிகிறோம். தொண்டையர்க்கரசு முன்வரும் சுரவி’ என்பது இதனை வலியுறுத்தும். (சுரவி. காமதேனு.) இப் பல்லவர்க்கரசு திருப்பனந்தாள் கல்லெழுத்தில் கண்ட ’’இராசராச மூவேந்த வேளார் சேனபதிப் பல்லவ அரசர்’’ ஆக இருக்கக் கூடும் (46 of 1914) என்று திரு. மு. இராகவ ஐயங்காரவர்கள் கருதுவர் (சாசனத் தமிழ்க்கவி சரிதம் பக்கம் 57). பல்லவர்க்கரசு என்று சொல்லப் பட்டமையின் சோழ நாட்டுக்கு அடங்கியிருந்த சோழ அரசுக்குட்பட்ட பல்லவநாட்டுத் தலைவனாக இவன் இருந்திருத்தல் கூடும்.

சோழனசக்கரம்

கலிங்கப் போருக்குக் கருணாகரன் புறப்பட்ட செய்தியைக் கூறவந்த செயங்கொண்டார், பின்வரும் தாழிசையில், கருணாகரன் சேனை முழுமைக்கும் கண் போன்ற-