பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

சோழர் சரித்திரம்

________________

96 சோழர் சரித்திரம் யாயிருந்து இறைவனை வழிபட்டு அரசாயின உண்மையையும், இவர் பல திருக்கோயில்கள். எடுப்பித்த வண்மையையும் திரு நெறித் தமிழ் வேதம் அருளிய சைவசமய குரவர்கள் தம் பதி கங்களில் பலவிடத்தும் பாராட்டி யிருக்கின்றார்களென்றால் இவரது பெருமையை நாம் எங்கனம் அளவிட்டுரைக்கலாகும்? செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் அங்கட் கருணை பெரிதா யவனே வெங்கண் விடையா யெம்வெணா வலுளாய் அங்கத் தயர் தா யினவா யிழையே." - திருஞானசம்பந்தர் "புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயி னூலாற் பொதுப்பந்தரதுவிழைத்துச் சருகான் மேய்ந்த சித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளா வன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பக்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய பாஞ்சுடரைக் கண்டடியே னுய்ந் தவாறே. - திருநாவுக்கரசர் ( தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கென வியற்றச் சுருண்ட செஞ்சடை யாரது தன்னைச் சோமனாக்கிய தொடர்ச்சிகண் டடியேன் புரண்டு வீழ்ந்துவின் பொன்மலர்ப் பாதம் போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் ஆவடு துறை யா தியெம் மானே. - நம்பியார்