பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

சோழர் சரித்திரம்

________________

102 சோழர் சரித்திரம் மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து, செருச்செய் தல், சிறைசெய்தல், கொலை செய்தல் முதலிய செற்றச் செயல்கள் செய்யாதொழிந்து, சிறைவிடுதல், இறை தவிர்தல், புலவர் முதலிய தக்கார்க்கு வேண்டுவன தருதல் இரவலர்க் கீதல் முதலிய அறச் செயல்கள் செய்யா நிற்பர். இது பெருமங்கலம் எனவும், வெள்ளணி எனவும் கூறப்படும். இங்கனமே இவர்கள் முடிபுனைந்த நாள் தொடங்கி ஒவ்வோ ராண்டினும் முடிசூட்டு நாளும் கொண்டாடப் பெறும். இது முடிபுனைந்து நீராடுதலின் மண்ணுமங்கலம் எனப்படும். இவற்றை முறையே, "சிறந்த நாளணி செற்றம் நீக்கிப் பிறந்த நாள் வயிற் பெருமங்கலமும் "சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும் எனத் தொல்காப்பியர் கூறுதல் காண்க. 18. கைத்தொழில் வாணிகம் இனி, அந்நாளிலே சோணாட்டில் கைத்தொழில்களும் வாணிகமும் எங்கனம் பல்கியிருந்தனவென்பது கரிகாலன் வாலாறு கூறிய வழிக் காணப்படும். அங்கே ' அரியவும் பெரியவும் ' எனச் சுருங்கக் கூறியவற்றை இங்கே காட்டு தும். சிலப்பதிகாரம் ஊர்காண்காதை உரையில் அடியார்க்கு நல்லார் கூறிய அருமணவன், தக்கோலி, கிடாாவன், காரகில் எனப்பட்ட அகிலின் தொகுதியும், கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ண ம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்பி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம்,