பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

சோழர் சரித்திரம்

________________

108 சோழர் சரித்திரம் என இவர்கள் உலகத்தைப் புரப்போராகக் கூறியிருப்பதும் சிந்திக்கற்பாலது. கபிலர் பாடிய இன்னாநாற்பதிலும் " முக்கட் பகவன் அடிதொழா தார்க்கின்னா பொற்பனை வெள்ளையை உள்ளா தொழுகின்னா சக்காத் தானை மறப்பின்னா ஆங்கின்னா சத்தியான் றாடொழா தார்க்கு என இந்நால்வரும் இம் முறையே கூறப்பெற்றனர். சிலப்பதி காரம் இந்திரவிழவூரெடுத்த காதையில், பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி கொடியோன் கோயிலும் எனவும், ஊர்காண் காதையில், " நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் எனவும் காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் இந் நான்கு தேவர்களின் கோயில்கள் இருந்தனவாக முறையே கூறப்பெற்றுள. இவற்றில் நால்வரின் முறை முற்கூறிய வாறன்றிச் சிறிது பிறழ்ந்துள்ளது. எனினும், யாண்டும் சிவபெருமானே முதலில் வைத்துக் கூறப்படுகின்றனர். அன்றியும், அவர், பிறவாயாக்கைப் பெரியோன் எனவும், பகவன் எனவும், இறையோன் எனவும் தலைமை தோன்றக் கூறப்படுதலும் சிந்திக்கற்பாலது. வேறிடங்களில் இன்னும் வெளிப்படையாகவும் சிவபிரானுக்கு முதன்மை கூறப் பெற்றுளது.