பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

சோழர் சரித்திரம்

________________

சமயம்

  • 109 "நீரும் லெனும் தீயும் வளியும் மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவாள் நெடியோன் தலைவனாக

மாசற விளங்கிய யாக்கையர் "என மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிலும் " நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப் S பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக எனக் கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலையிலும் கூறி யிருத்தல் நோக்குக. இவ்வாற்றால் தொன்றுதொட்டுத் தமிழ் மக்கள் முழுமுதற் கடவுளாகக்கொண்டு வழிபட்டு வந்த தெய் வம் சிவபெருமானே என்பது வெள்ளிடை மலைபோல் தெள்ளிதின் விளங்கும். பிற்காலத்துச் சமணவாசிரியர் முதலாயினாரும் தமிழ் வழக்கின். இவ்வுண்மை யுணர்ந்தே தம் நூல்களில் பல கடவுளரையும் கூறுமிடத்துச் சிவபெரு மானை முதற்கண் வைத்துக் கூறிப்போந்தனர். நச்சினார்க்கினி யர், அடியார்க்குநல்லார் முதலிய உரையாசிரியன்மாரும் இந் நெறி பிழையாமலே உரைவரைவாராயினர். இங்ஙனமா யினும், பண்டைத் தமிழ் மக்கள் திருமாலிடத்தும் செவ் வேளிடத்தும் நிறைந்த அன்புடையராகவே விளங்கினர். இன்னோரையும் உலகங்காக்கும் கடவுளராகப் போற்றிப் புகழ்ந்தனசே யன்றி ஒரு சிறிதும் குறைவுபடக் கூறினால்லர். மற்றும், தொகை நூல்களின் கடவுள் வாழ்த்திலும், பரிபாடலிலும் சிவபிரானோடு வேற்றுமையில்லாத முதற் றெய்வங்களாகவே இவர்கள் பரவப்படுகின்றனர். இன்னும், சிவ வழிபாட்டினும் செவ்வேள் வழிபாடு விஞ்சியிருந்த தெனக் கூறுதலும் சாலும். பத்துபாட்டில் ஒரு பாட்டும் (திருமுருகாற்றுப் படையும்), பரிபாடலில் முப்பத்தொரு பாட்டும் முருகப்பிரானுக்கு உரியவாயிருத்தலே இவ்