பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

சோழர் சரித்திரம்

________________

112 சோழர் சரித்திரம் கொண்டும் தம்முள் வேற்றுமை சிறிதுமின்றி ஒழுகி வந்தனர் என்பதும் பழைய இலக்கியங்களினின்றும் அறியலாகின்ற உண்மைகளாம். எச்சமயத்தையும் இகழாது போற்றும் பெருந்தன்மையுடைமைக்குக் தெய்வப் புலமைத் திருவள்ளு வனாரையும் இளங்கோவடிகளையும் சிறந்த எடுத்துக் காட் டாகக் கொள்ளல் தகும். வள்ளுவனார், 'நூலோர் தொகுத்தவற்று ளெல்லாம் தலை " பல்லாற்றால் தேரினு மஃதே துணை என்றிங்கனம் எல்லா நூலினும் நல்லன எடுத்து எல்லார்க் கும் பொதுப்படக் கூறிச் செல்வர்; எம் மதத்தையும் இகழார். இளங்கோவடிகள், தம் தமையனாகிய செங்குட்டுவன் சிவபெருமான் திருவருளாற் பிறந்தவன் என்றும், அவன் இமயஞ்செல்லப் புறப்பட்டபொழுது உலகுபொதியுருவத் துயர்ந்தோனாகிய சிவபெருமான் சேவடியை முடிமேற் கொண்டு யாரையும் இறைஞ்சாச் சென்னியால் இறைஞ்சி வலங்கொண்டு போந்து யானையின் பிடரில் ஏறியருளி, பின்பு ஆடகமாடத்து அறிதுயிலமர்ந்த திருமாலின் சேடங் கொண்டுவந்து சிலர் நின்று துதித்தகாலையில் தான் சிவபெரு மான் திருவடியை மணி முடிமேல் வைத்திருத்தலின் அதனை வாங்கித் தோளின்மீது தரித்தனன் என்றும் கூறு முகத்தால் செங்குட்டுவன் சிவபெருமானையே முழுமுதலாகக் கொண்டு வழிபடுவோன் என்பது பெறவைத்து, தம்கொள்கையும் அதுவா தலை 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்பது முத லியவற்றாற் குறிப்பிட்டனர். அன்னராயினும், அவர், கவுந்தி யடிகள் அருகதேவனை வாழ்த்துதல் கூறுமிடத்து,