பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

சோழர் சரித்திரம்

________________

சோழர் சரித்திரம் " திங்கட் செல்வன் றிருக்குலம் விளங்கச் செங்கணாயிரத்தோன் றி றல் விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி' என்று சிலப்பதிகாரம் கூறுவது காண்க. இவற்றிலிருந்து, தமிழாசர் யாவரையும் சந்திர குலத்தவர் என்று கூறும் அரிவமிசக்கதை பிற்காலத்தில் கற்பிக்கப்பட்டதென்று துணிய வேண்டி யிருக்கிறது. இனி, சோழர் சூரியகுலத் தவராதல் எப்படியென்று பார்ப்போம். கலிங்கத்துப்பரணி, அரசபாரம்பரியத்திற் கூறியிருக்கும் சோழ மன்னர் வழிமுறை பின் வருவது : திருமால், பிரமன், மரீசி, காசிபன், சூரியன், மனு, இக்குவாகு, புரந்தானை வாகனமாகக்கொண்டு தானவரை வென்றவன் (ககுஸ்தன்), புலியும் மானும் ஒரு துறையில் நீருண்ண அரசுபுரிந்தவன், முசுகுந்தன், தேவர்களுக்கு அமுத மளித்தவன், புறவுக்காகத் தலைபுக்கவன் (சிபி), சோழ மண் டலம் அமைத்தவன் (சுராதிராசன் முதலாக வரு சோழன்), இராசகேசரி, பாகேசரி, காலனிடத்தே வழக்குரைத்தவன், காவிரிப்புனல் கொணர்ந்தவன் (காந்தன்), அகிலலோகமும் வென்று கொண்டவன், இந்திரனைப் புலியாகக் கொடியில் வைத்தவன், ஒரு கடலில் மற்றொரு கடலைப் புகவிட்டவன், தன் குருதியை உண்ணுமாறு அளித்தவன், வாதராசனை (காற் றினை) வலிந்து பணிகொண்டவன், தூங்கெயிலெறிந்தவன், வானத்தில் விமானங்களைச் செலுத்தினவன், பிலத்தின் வழியே சென்று நாககன்னியை மணந்தவன், பொய்கையார் பாடிய களவழிக்கவிதை கேட்டுச் சோனைச் சிறையினின்றும் விட்டவன் (செங்கணன்), பதினாறு நூறாயிரம் பொன் கொடுத்துப் பட்டினப்பாலை என்னும் பாட்டினைக் கொண் டவன் (கரிகாலன்), சேரமண்டலத்தை வென்று சதைய நாள்