பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

சோழர் சரித்திரம்

________________

முசுகுந்தன் 21 புரியை முற்றுகை யிட்டனன். அவன் படையெடுத்து வருதலை முன்னமே யறிந்த கண்ணன், துவாரகையை உண்டாக்கி, மதுரையிலுள்ளாரனைவரையும் அவன் வரு தற்கு முன்பே அங்கே அனுப்பிவிட்டு, தான் மாத்திரம் மதுரையில் தனித்திருந்து, யவனன் மதுரையை முற்றிய பொழுது அஞ்சியோடுவான் போன்று கையிற் படைக்கல மின்றியே ஓடி ஓர் மலை முழைஞ்சினுள் நுழைந்தனன். காலயவனனும் கண்ணனைப் பின்றொடர்ந்து சென்று குகை யினுட்புக்கு, அங்கே துயின்று கொண்டிருந்த முசுகுந்தனைக் கண்டு, 'இவன்றான் கண்ணன் ; பொய்த்துயில் புரிகின்றான்' என்று எண்ணிக் காலால் உதைத்தான்; உடனே முசுகுந்தன் “ அன்ன தியற்றலும் அன்னது தன்னி லருத்தி பொருத்திமுடித் துன்னரு மேன்மை யடைந்தவர் தம்மையு மோதினன் ஓதுதலும் இன்னலில் மன்னவ னப்படி பற்பக லிப்புவி யிற்புரியா ஒன்னலர் வந்து பணிந்திட வைய முவந்து புரந்தனனே." "மேவொரு நாள் தனின் மண்ணுல கத்தினும் விண்ணுல கத்தணுகித் தேவர் வணங்குறு கோவை வருத்து திருக்கவு ணப்படைவென் றோவில் பெரும்புகழ் ஏழு விடங்கரை யொண்புவி மீதுகொணர்க் தேவரு மன்பொடு காண விருத்தி யிருங்கதி யுற்றனனே. (கந்தபுராணச் சுருக்கம், தேவகாண்டம் 12, 13, 14; தக காண்ட ம் 178, 179, 180, 181.) - A