பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

சோழர் சரித்திரம்

________________

48 சோழர் சரித்திரம் "மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதாற் கண்கொண்ட சென்னி கரிகாலன் என்னும் குலோத்துங்கன் உலாவாலும், "தொழுது மன்னரே கரைசெய் பொன்னியிற் றொடா வந்திலா முகரி யைப்படத் தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென் றிங்க ழிக்கவே யங்க ழிந்ததும் " என்னும் கலிங்கத்துப் பரணியாலும் விளங்குகின்றது. காவிரியின் கிளை நதிகளாகிய வெட்டாறு, அரிசிலாறு முதலியன இவனால் வெட்டப்பட்டன என்றும் சிலர் கருது கின்றனர். இங்கனமாகக் காவிரியின் நீர் எஞ்ஞான்றும் வற்றாது பாய்ந்து வளஞ் செய்தலின், சோணாட்டிலே நெல்லை யறுத்துச் சூட்டை மலையாக அடுக்கி நாடோறும் கடாவிட்டு மேரு வென்னும்படி திரட்டின நெற்பொலி நெருங்கத் தெற்றின சேர் (நெற்கூடு) களிலே இடமின்றிக் கிடக்கும்படி வேலி நிலம் ஆயிரக்கலமாகிய செந்நெல் விளைவுடையதாயிற்று, "கூனிக் குயத்தின் வாய்கெல் லரிந்து சூடு கோடாகப் பிறக்கி நாடொறுங் குன்றெனக் குவை இய குன்றாக் குப்பை கடுந்தெற்று மூடையி னிடக்கெடக் கிடக்கும் சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கு நாடுகிழ வோனே - பொருநாறு எரியும் ஏற்றத்தினாலும் பிறநாட்டு வாரி சுரக்கும் வளனெல்லாம் - தேரின் அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும் கரிகாலன் காவிரிசூழ் நாடு-ஷை இறுதி வெண்பா என்பன காண்க.