பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

சோழர் சரித்திரம்

________________

56 சோழர் சரித்திரம் இனி, இவ்வேந்தர் பெருமான் வேதங்கூறும் வேள்வி பலவுஞ் செய்து முடித்தவனென்பது 244-ம் புறப்பாட்டால் விளங்குகிறது. இவன் தமிழ்ப்புலமை சான்று தமிழைப் பொன்னேபோற் போற்றி வளர்த்தவனென்பது நல்லிசைப் புலவருள் கருங்குழலாதனார், வெண்ணிக்குயத்தியார் என் போர் புறத்திலும், பாணர், நக்கீரர், மாமூலர் என்போர் அகத்திலும் இவ்வாசனைப் புகழ்ந்து பாடிய துடன், முடத் தாமக் கண்ணியார் பொருநராற்றுப்படையும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையும் இவன்மீது பாடி யிருத்தலானும், உருத்திரங்கண்ணனார்க்கு இவன் பதினாறு நூறாயிரம் பொன் பரிந்தளித்தமையானும் பெறப்படும். இவனைப் பாடியவருள் வெண்ணிக்குயத்தியார் பெண்பாலரா யிருத்தலும், இவன் மகள் ஆதிமந்தி நல்லிசைப் புலமைவாய்ந் திருத்தலும் மகளிர் கல்வியிற் சிறந்து விளங்குவதில் இம் மன்னனுக்கிருந்த ஆர்வத்தைப் புலப்படுத்தும். கற்பிற் சிறந்த மனைவியர் பலர் இவனுக்கிருந்திருக்க வேண்டுமென்பது, தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு வேத வேள்வித் தொழின் முடித்ததூஉம் அறிந்தோன் மன்ற அறிவுடை யாளன் என்று புறப்பாட்டிற் கூறியிருத்தலான் அறியலாகும். இவனுக்கு ஆதிமந்தி என்னும் புதல்வியை யன்றி, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்னும் புதல்வர் “ மலி புனல் பொருத மருதோங்கு படப்பை ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால்காண புனனயந் தாடும் அத்தி யணிநயந்து காவிரி கொண்டொளித் தாங்கு - அகம், 376