பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

சோழர் சரித்திரம்

________________

தித்தன் 25 N என அகத்திலே பாணரால் இவன் பாராட்டப்படுவதிலிருந்து இம்மன்னன் பெருங் கொடையாளி என்பதும், கற்பிற சிறந்த ஐயை என்பாள் இவனுக்குப் புதல்வி என்பதும் வெளியாகின்றன. தித்தன் பிண்ட நெல்லின் உறக்கை" “ நொச்சி வேலித் தித்தன் உறந்டை கன்முதிர் புறங்காட் டன்ன ( பலநல்ல புலனணியும் சீர்சான்ற விழுச்சிறப்பிற் சிறுகண் யானைப் பெறலருந் தித்தன் உறந்தை எனப் புறநானூற்றிலும் முறையே பாணரும் நக்கீரரும் உறந்தையை இவனுக்குரிமைப் படுத்துரைப்பது முதலிய வற்றால் இவன் உறையூரைச் சிறந்த மதிலாணும் காட்டாணும் உடையதாகச் செய்து பகைவென்று குடிகளை நன்கு புறந்தந்து புகழ்சிறந்து விளங்கினன் எனப் புலனாகின்றது. வடுக அரசனாகிய கட்டி என்பவன் ஒருகால் இத்தித்தனுடன் போர் செய்யக் கருதி வடநாட்டில் அரசுபுரிந்த பாணன் என்னும் வீரனுடன் சேர்ந்து உறையூரையடைந்து ஓர் புறத்தில் இருக் கையில் அவனது நாளவைக்கண் ஒலிக்கப்பெறும் கிணை யோசை கேட்டு அச்சமுற்றுப் பொராது ஓடினன். இது, "வலிமிகு முன்பிற் பாணனொடு மலி தார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடின் றெண்கிணைப் பாடுகேட்டஞ்சிப் போரடு தானைக் கட்டி பொராஅ தோடிய வார்ப்பினும் பெரிதே என அகப்பாட்டிற் கூறப்படுகின்றது. இத்தகு சிறப்பு வாய்ந்த இவ்வேந்தன் தன் மைந்தனாகிய போர்வைக்கோப்