பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

சோழர் சரித்திரம்

________________

82 | சோழர் சரித்திரம் இவ்வாறாகிய உத்தம நட்பினால் விளையும் இன்பத்தைப் பார்க்கிலும் இவ்வுலகத்துச் சிறந்த இன்பம் யாதுளது? தலை யாயார் தம்முட்செய்த நட்புக் கரும்பை நுனியிலிருந்து தின் றாற் போலவும், பேரறிவாளர்கள் இயற்றிய நூல்களின் நயம் அவற்றிற் பயிலுந்தோறும் வெளிப்பட்டு இன்பம் விளைத்தல் போலவும் மேன்மேல் வளர்ந்து இன்பம் பயப்பதாமெனக் கூறுவர் ஆன்றோர். துறக்க வின்பமும் இதற்கு நிகராகாது எனில் இதன் பெருமையை வேறு கூறுதல் என்? கோப் பெருஞ் சோழரும் பிசிராந்தையாரும் காண்டலின்றியும் இங்கனமாக ஈண்டிய நட்பின் பயன் துய்த்து வருங்காலத்தில் நிகழ்வதொரு செய்தி நெஞ்சினையுருக்குந் தன்மையது. இவ்வாசர்பெருந்தகைக்கு இரண்டு மக்கள் உளராயினர். மகனுரைக்கும் தந்தை நலத்தை என்றும், "தக்கார் தகவில ரென்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்" என்றும் ஆன்றோர் கூறும் பொது நீதிக்கு விலக்காக ஒரோ வழித் தகவிலார்க்கு நன் மக்களும், தகவுடையார்க்குத் தீய மக்களும் உண்டாகின்றனர். கோப்பெருஞ் சோழரின் மக்க ளும் பாற்கடலில் தோன்றிய ஆலாலம்போலும் கொடிய பண் பினராயிருந்தனர். அன்பிற்கே நிலைக்களமாகிய தம் அரு மைத் தந்தையுடன் போர் செய்யவும் எழுந்தனரென்றால் அன்னவரின் தீய பண்பை என்னென்று எடுத்துரைப்பது? கொடியவர்களான மக்கள் போர் குறித்து வருதலைக் கோப் பெருஞ்சோழர் கண்டார் ; சினங்கொண்டார் ; தாமும் போர் செய்தற்கு அக்கொடியாற்மேற் சென்றார். அப்பொழுது அங்கிருந்து அந் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண் டிருந்த