பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

சோழர் சரித்திரம்

________________

கோப்பெருஞ் சோழர் 85 தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின் மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும் மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே" - புறம் என்பது. இதன் பொருள் : 'அழுக்கு நிறைந்த தெளிவில் லாத உள்ளத்தினையுடையோர் அறத்தினைச் செய்வோமோ செய்யாதிருப்போமோ என்று கருதி ஐயம் நீங்காதவராகின் றனர் ; யானை வேட்டைக்குச் செல்வோன் யானையையும் எளி தாகப் பெறுவன் ; காடை வேட்டைக்குச் செல்வோன் அது பெறாமல் வெறுங்கையுடனும் திரும்புவன். அதனால், உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்த நல் வினைப் பகுதியால் அதனை நுகர்தல் உண்டெனின், அவர் இரு வினையும் செய்யாத உம்பருலகத்தின்கண் இன்பமனுபவித்த லும் கூடும்; அவ்வுலகத்து நுகர்ச்சியில்லையாயின், மாறிப் பிறக்கும் பிறப்பு இல்லையாகவும் கூடும் ; மாறிப்பிறத்தலென் பதே இல்லையென்று சொல்வாருளராயின் இமயமலையின் சிக சம் ஓங்கினாற்போன்ற தமது புகழை நிலைபெறுத்தி வசையில் லாத உடம்போடு கூடி நின்று இறக்தல் மிகவும் பெருமை யுடையது; அதனால், எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழ கிது' என்பது. இங்ஙனம் அறிவுறுத்தருளி, அங்கே குழுமியிருந்த சான்றோர்களைப் பார்த்து ' என் நண்பன் பிசிராந்தை இப் பொழுது வருவன்' என்று பெருஞ்சோழர் கூறினர். சான் றோர்களோ அவர் வாரார் என்றனர். அது கேட்டதும் பெருங்கோவானவர் ' என் உயிரைப் பாதுகாக்கும் நண்பன் பாண்டி நாட்டுள்ளும் சேய்மையிலுள்ள தாகிய பிசிர் என்னும் ஊரிடத்தான் என்று சொல்லுவர்; எனினும், நாம் செல்வம்