பக்கம்:சோழர் வரலாறு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

சோழர் வரலாறு



தலைப்பின் கீழ்க் காணப்படுகிறது. புறநானூற்று அடிக்குறிப்பும் இதுவும் வேறுபடக் காரணம் என்ன?

(3) புறநானூறு 74-ஆம் செய்யுள் அடிக்குறிப்பு. கனைக்கால் இரும்பொறை சிறைக்கண்ணே இறந்தான் என்பதைக் குறிக்கிறது. ஆயின், தமிழ் நாவலர் சரிதையில் உள்ள செய்யுள் அடியில்,

“இது கேட்டுப் பொய்கையார் களவழிநாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தால்” என்பது குறிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கூற்றுகளும் தம்முள் மாறுபடுவதைக் கண்ட நாவலர்-பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், “துஞ்சினான் கணைக்கால் இரும்பொறையாகச் சிறைவீடு செய்து அரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவன் என்று கொள்ளவேண்டும்” என்று கூறி அமைந்தனர்.[1] இங்ஙனம் பேரறிஞரையும் குழப்பத்திற்கு உட்படுத்தும் பொருத்தமற்ற அடிக்குறிப்புகளைக் கொண்டு கோச்செங்கணான் போன்ற பேரரசர் காலத்தை வரையறுத்தல் வலியுடைத்தாகாது.

2. கோச் செங்கணான் எழுபது சிவன் கோவில்கள் கட்டினான் எனத் திருமங்கையாழ்வார் குறித்துள்ளார்.[2] சங்க காலத்தில் எந்த அரசனும் சிவன் கோவிலோ, திருமால் கோவிலோ கட்டியதற்குச் சான்றில்லை. சிவன் கோவில்கள் பலவாக ஒரே அரசனால் கட்டப்பட்ட காலம் சைவ உணர்ச்சி வேகம் மிகுதிப்பட்ட காலமாதல் வேண்டும். சங்க காலத்தில் அத்தகைய உணர்ச்சி வேகம் மிக்கிருந்ததாகக் கூறச் சான்றில்லை. சங்க காலத் தமிழகத்தில் பல சமயங்களும் அமைதியாக இருந்தன என்பதே அறியக் கிடக்கிறது. அவ்வமைதியான நிலையில் ஒர் அரசன் 70 கோவில்கள் கட்டுதல் அசம்பாவிதம். ஆயின், சங்க காலத்திற்குப் பின்னும் அப்பர்க்கு முன்னும்


  1. அவர் பதிப்பு, முகவுரை, பக்.5 (கழகப் பதிப்பு)
  2. திருநறையூர்ப் பதிகம், 8.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/148&oldid=482800" இலிருந்து மீள்விக்கப்பட்டது