பக்கம்:சோழர் வரலாறு.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

சோழர் வரலாறு



உண்மையோ, தெரியவில்லை. பெருமகிழ்ச்சியோடு திரும்பிவந்த சேனைத் தலைவனை இராசேந்திரன் கோதாவரி யாற்றங்கரையிற் சந்தித்து மகிழ்ந்தான்.[1] இந்த வட நாட்டுப் படையெடுப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கலாம். இராசேந்திரன் தான் வென்ற வட நாடுகளை ஆள விரும்பவில்லை. அதற்காக அவன் படையெடுத்திலன்; தான் புதிதாக அமைத்த கங்கை கொண்ட சோழபுரத்தையும் சோழகங்கம் என்னும் ஏரியையும் கங்கை நீரால் தூய்மை ஆக்க விரும்பியே படைகளை வடக்கே அனுப்பிக் கங்கை நீரைக் கொண்டுவர முயன்றான். வேற்றரசன் படை தன் நாட்டு வழியே செல்லப் புதிய நாட்டினர் இடந்தரார் ஆதலாலும், வடவரை வென்ற புகழ் தனக்கு இருக்கட்டுமே என இராசேந்திரன் எண்ணியதாலுமே இப்போர்கள் நிகழ்ந்தனவாதல் வேண்டும்.

வங்கத் தமிழ் அரசர் : இப் படையெடுப்பில் ஈடுபட்ட படைத்தலைவனோ அரசியல் தந்திரியோ ஒருவன் (கருநாடகன்) மேற்கு வங்காளத்தில் தங்கிவிட்டான். அவன் வழிவந்தவன் சாமந்த சேனன் என்பவன். அவனே பிற்காலத்தில் வங்காளத்தை ஆண்டுவந்த சேன மரபின் முதல் அரசன் ஆவன்[2]. மிதிலையை ஆண்ட கருநாடர் இங்ஙனம் சென்ற தென்னாட்டவரே ஆவர். கங்கைக் கரை நாடுகளில் இருந்த சிவ பிராமணர் பலர் இராசேந்திரன் காஞ்சியிலும் சோழ நாட்டிலும் குடியேறினர்[3]. அறிவும் ஆற்றலும் உடையவர் எந்நாட்டாராலும் போற்றலுக் குரியரே அல்லரோ?

கடாரம் முதலியன : இராசேந்திரன் கடல் கடந்து கடாரம் முதலியன கொண்ட செய்தி இவனது 13-ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிற்றான் காண்கிறது.[4] எனவே,


  1. Thiruvalangadu Plates.
  2. R.D. Banerji “Palas of Bengal”, pp.73, 99
  3. K.A.N. Sastry’s ‘Cholas’, Vol.I, P.254.
  4. S.I.I. Vol. 2, p. 109.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/222&oldid=491310" இலிருந்து மீள்விக்கப்பட்டது