பக்கம்:சோழர் வரலாறு.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

225



பாக்கையை எரியூட்டினான்[1]. சிறு துறை, பெருந்துறை, தைவ பீமகசி என்னும் முத்துறைகளிலும் [குறிப்பு 1]யானைகளைக் குளிப்பாட்டிச் சாளுக்கியரது பன்றிக்குறி பொறிக்கப் பட்ட குன்றுகளில் புலிக்குறி பொறித்தான்[2].

சோழரை வெல்ல முடியாதென்பதை உணர்ந்த ஆகவமல்லன் தூதுவர் சிலரை இராசாதிராசனிடம் அனுப்பினான். சோழன் அவருள் இருவரைப்பற்றி ஒருவற்கு ‘ஐங்குடுமி’ வைத்தும், மற்றவர்க்குப் பெண் உடை தரித்தும் அலங்கரித்தான்; அவர்க்கு முறையே ஆகவமல்லன், ஆகவமல்லி’ என்ற பெயரிட்டுத் திருப்பி அனுப்பினான். இதனாற் சிறந்த ஆகவமல்லன் ‘பூண்டி’ என்னுமிடத்திற் போர் செய்து படுதோல்வி அடைந்தான். இராசாதிரா சன் கலியாணபுரத்தைக் கைக்கொண்டு, அங்கு வீராபிடேகம் செய்து விசய ராசேந்திரன் என்ற பட்டம் சூடிக்கொண்டான்[3]. இவன் அப்பெரு நகரத் தையும் சூறையாடிப் பல பொருள்களைக் கைப்பற்றினான். அவற்றுள் குறிப்பிடத்தக்கது வாயிற்காவலர் சிலை ஒன்று. அதன் பீடத்தில், “ஸ்வஸ்தி ரீ உடையார் பூர் விசயராசேந்திர தேவர் கலியாணபுரம் எறிந்து கொடுவந்த துவார பாலகர்” என்பது பொறிக்கப் பட்டுள்ளது. அச்சிலை தாராசுரம் ஐராவதேச்சுரர் கோவிலில் இருந்தது; இப்பொழுது தஞ்சைப் பெரிய கோவிலில் இருக்கிறது[4].


  1. இவை துங்கபத்திரை, கிருஷ்ணை, பீமா என்னும் ஆறுகள் - K.A.N. Sastry’s ‘Cholas’ I, p.277.
  1. S.I.I. Vol. 4. No 539; Vol. 5. No.465
  2. 172 of 1894; 92 of 1892.
  3. 172 of 1894; 244 of 1925
  4. இதனை என் நண்பர் திரு. J.M. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் (பெரிய கோவில் நடைமுறை அலுவலாளர்) எனக்குக் காட்டினார்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/227&oldid=492540" இலிருந்து மீள்விக்கப்பட்டது