பக்கம்:சோழர் வரலாறு.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

சோழர் வரலாறு



கங்கைகொண்ட சோழபுரம்[குறிப்பு 1] : இஃது இராசேந்திர சோழனால் புதிதாக அமைக்கப்பட்ட பெரிய நகரம் ஆகும். இது திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் உடையார் பாளையம் தாலுக்காவில் இப்பொழுது ஒரு சிற்றூராக இருக்கின்றது. இராசேந்திரன் வடநாடு வென்ற பெருமைக்கு அறிகுறியாக கங்கைவரை இருந்த நாடுகளை வெற்றி கொண்டதற்கு அடையாளமாகவே இக் கங்கை கொண்ட சோழபுரம் கட்டினான்[1]; இதிற்கிடைத்த பழைய கல்வெட்டு வீர ராசேந்திர சோழ தேவனதே ஆகும்[2]. இவன் தஞ்சைப் பெரிய கோவிலைப் போலக் ‘கங்கை கொண்ட சோழேச்சரம்’ என்னும் அழகு மிக்க கோவிலைக் கட்டினான்; ‘சோழ கங்கம்’ என்னும் வியத்தகு ஏரி ஒன்றை எடுத்தான்.

இராசேந்திரன் கங்கைநீர் கொணர்ந்து பெரு வெற்றியுடன் மீண்டுவந்த தன் தானைத் தலைவனையும் படைகளையும் கோதாவரிக் கரையில் சந்தித்தான்; திரும்பி வருகையில் தளிதோறும் தங்கித் தரிசித்து இறுதியில் தன் நகரை அடைந்தான்; கங்கை நீரைக் கொண்டு தான் புதிதாகக் கட்டிய மாநகரையும் கோவிலையும் ஏரியையும் தூய்மைப் படுத்தினான். இக்கங்கைப் படையெடுப்பு மக்களால் வரவேற்கப்பட்டது[3].

நகர அமைப்பை அறியத்தக்க சான்றுகள் இல்லை. அங்குச் சோழ, கேரளன் என்னும் அரண்மனை ஒன்று


  1. இதனை யான் 25-4-42-இல் சென்று பார்வையிட்டேன். எனக்கு அங்கு வேண்டிய உதவி செய்த பெரு மக்கள் திருவாளர் க. முத்துவேலாயுதம் பிள்ளை, கோவில் நடைமுறை அலுவலாளர் (Executive Officer) ஞானப்பிரகாசம் பிள்ளை என்போர் ஆவர்.
  1. Ep. Ind. Vol. 15, p. 49.
  2. 82 of 1892.
  3. M.E.R. 1932, p.50; Kalaimagal Vol.II p.326.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/228&oldid=1233550" இலிருந்து மீள்விக்கப்பட்டது