பக்கம்:சோழர் வரலாறு.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

சோழர் வரலாறு



புத்தமித்திரர் இக்காலத்தவரே. திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பியையும் இராசேந்திரன் பார்த் திருத்தல் கூடியதே.

வடமொழி : இராசேந்திரனைப் பற்றிய வடமொழிப் பட்டயங்களும் கல்வெட்டுகளும் காவிய நடையில் அமைந்தவை. சிறப்பாகத் திருவாலங்காட்டுச் செப்பேடு களை வரைந்த நாராயண கவி சிறந்த வடமொழிப் புலவர் ஆவர். தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் எண்ணாயிரம் என்பது ஒர் ஊர். அஃது ‘இராசராசச் சதுர்வேதி மங்கலம்’ எனப்பட்டது. அங்கொரு பெரிய வடமொழிக் கல்லூரி நடந்து வந்தது. அதைப்பற்றிய விவரங்களும்[1] பிறவும் ‘சோழர் காலத்துக் கல்வி நிலை’ என்னும் பகுதியிற்பார்க்க. இங்ஙனமே ‘திரிபுவனை’ என்னும் இடத்திலும் வட மொழிக் கல்லூரி நடந்துவந்தது[2]. அதன் விவரங்களும் ஆண்டுக் காண்க.

அரசன் சிறப்பு : இராசராசன் சோழப் பேரரசை நிலை நிறுத்தினான்: இராசேந்திரன் அதனை மேலும் வளப்படுத்தினான்; கடல்கடந்து வெற்றி பெற்றான்; சோழர் புகழை நெடுந்துரம் பரப்பினான். இராசராசன் கோவில் கட்டித் தன் பக்திப் பெருமையை நிலைநாட்டினான்; இராசேந்திரன் அதனைச் செய்ததோடு, புதிய நகரையும் வியத்தகு பெரிய ஏரியையும் அமைத்தான். இராசராசன் சிவபக்தனாக இருந்தது போலவே இவனும் இருந்து வந்தான்; தந்தையைப் போலவே பிற சமயங்களையும் மதித்து நடந்தான் கடல் வாணிகம் பெருக்கினான்.இவனது செப்புச் சிலை ஒன்று தஞ்சைப் பெரிய கோவிலில் இருக்கின்றது. இராசேந்திரன் எல்லாச் சமயங்களிடத்தும் பொதுவாக நடந்து கொண்டான். இவன் தனது 24-ஆம் ஆட்சி ஆண்டில், சேர அரசனான இராசசிம்மன் திருநெல்வேலி கோட்டத்தில் மன்னார்கோவிலில் கட்டிய


  1. 338 of 1917; M.E.R. 1918, p.147; 343 of 1947
  2. 176 of 1919
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/244&oldid=492664" இலிருந்து மீள்விக்கப்பட்டது