பக்கம்:சோழர் வரலாறு.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

சோழர் வரலாறு


பாகம் 3

1. முதற் குலோத்துங்கன்

கி.பி. (1070 - 1122)

குலோத்துங்கன் பட்டம் பெற்ற வரலாறு

(கி.பி. 1070)

பிறப்பும் இளமையும் : இராசேந்திர சோழன் மகளான அம்மங்காதேவி இராசராச நரேந்திரனை மணந்து, கி.பி. 1043-ஆம் ஆண்டில் பூச நாளில் ஒரு மகனைப் பெற்றாள்[1]. அவனுக்குத் தாய்-பாட்டன் பெயரான ‘இராசேந்திரன்’ என்பது இடப்பட்டது. அவன் சாளுக்கிய மரபுக்கு ஏற்ப ‘ஏழாம் விஷ்ணுவர்த்தனன்’ என்று பெயர் பெற்றான்[2].

குடும்ப நிலை : இராசராச நரேந்திரனது சிறிய தாய் மகனான (தந்தையான விமலாதித்தற்குப் பிறந்த) ஏழாம் விசயாதித்தன் என்பவன் இருந்தான். இராசராச நரேந்திரன் கி.பி. 1018 முதல் 1059 வரை (41 ஆண்டுகள்) வேங்கி நாட்டை அரசாண்டான். அப்பொழுது விசயாதித்தன் அவனுக்கு உதவியாக இருந்து நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்குச் ‘சக்திவர்மன்’ என்னும் மகன் இருந்தான். குலோத்துங்கன் இளவரசுப் பட்டம் பெற்றுத் தந்தையுடன் இருந்தான்.

குழப்பம் : கி.பி. 1050-இல் இராசராசன் இறந்தான். ஆனால் இளவரசுப் பட்டம் பெற்ற குலோத்துங்கன் நாடாளக்கூடவில்லை. அவன் தன் சிறிய தந்தையிடம் நாட்டை ஒப்புவித்து வடக்கு நோக்கிச் சென்றான்; வயிராகரம், சக்கரக்கோட்டம் முதலிய இடங்களைக் கைப்பற்ற முனைந்தான். மேலும், அவனது எண்ணம் முழுவதும் சோழப் பேரரசின் மீதே இருந்தது. இதற்கிடையில் ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கியைக்


  1. S.I.I. Vol.6, No. 167
  2. Ibid. No. 201.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/252&oldid=491665" இலிருந்து மீள்விக்கப்பட்டது