பக்கம்:சோழர் வரலாறு.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

சோழர் வரலாறு



எனவே, குலோத்துங்கன் பாண்டி மண்டலத்தையும் சேர மண்டலத்தையும் வென்று அமைதியை நிறுவினான். அவன் அதனை அமைதியாக ஆளுமாறு சிற்றரசரை எற்படுத்தினான்; தன் சொந்த நிலைப் படைகளைப் பல இடங்களில் நிறுத்தினான்; எனினும், அதன் சிற்றரசர் ஆட்சியில் தலையிட்டிலன். அவர்கள் பெரும்பாலும் சுயாட்சி பெற்றே இருந்தனர் என்னலாம். அவர்கள் தனக்கு அடங்கி இருத்தல் ஒன்றையே கப்பல் கட்டல் என்ற ஒன்றையே குலோத்துங்கன் எதிர்பார்த்தான். இஃது, இம்மண்டலங்களில் குலோத்துங்கன் கல்வெட்டுகள் குறைந்திருத்தல் கொண்டும் துணியப்படும்[1].

தென்னாட்டில் குழப்பம் : மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்குப் பதினைந்து ஆண்டுகட்கு அப்பால், தெற்கே மீண்டும் குழப்பம் உண்டானது. அக்குழப்பத்தில் வேள்நாடு (தென் திருவாங்கூர்) சிறந்து நின்றது. குலோத்துங்கன் அக்குழப்பத்தை அடக்க நரலோக வீரன் என்னும் தானைத் தலைவனை அனுப்பினான். அவனுக்குக் காலிங்கராயன் என்னும் வேறு பெயரும் இருந்தது. அவனைப் பற்றிப் பல கல்வெட்டுகளில் குறிப்பும் காணப்படுகிறது. அப்பெரு வீரன் குழப்பத்தை அடக்கிப் பகைவரை ஒடுக்கித் தென்னாட்டில் அமைதியை நிறுவினான்[2].

ஈழத்து உறவு : குலோத்துங்கன் சுயாட்சி நடத்திவந்த விசயபாகுவுடன் நட்புப் பெற விழைந்து தூதுக்குழுவை அனுப்பினான். அதே சமயம் விக்கிரமாதித்தனும் தூதுக் குழு ஒன்றைத் தக்க பரிசுகளுடன் அனுப்பினான். விசயபாகு இருவரையும் வரவேற்றுச் சிறப்புச் செய்தான்; முதலில் சாளுக்கிய நாட்டுத் தூதுவரைத் தன் நாட்டுத் தூதருடன் அனுப்பினான். அவர்கள் சோழ நாட்டிற்குள் நுழைந்ததும், சோழ நாட்டார் ஈழ நாட்டுத்தூதர்


  1. A.R.E. 1927, II 18.
  2. K.A.N. Sastry’s ‘Studies in Chola History p.178-180,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/258&oldid=1233588" இலிருந்து மீள்விக்கப்பட்டது