பக்கம்:சோழர் வரலாறு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

257



மூக்குகளையும் காதுகளையும் அறுத்து அனுப்பினர். இதனை அறிந்த விசயபாகு வெகுண்டெழுந்தான் சோழர் தூதுக்குழுவை அழைத்து ‘உம்மரசனை என்னோடு தனித்துப் போரிட வரச் செய்க, இன்றேல், இரு திறத்துப் படைகளேனும் போரிட்டுப் பலத்தைக் காணச் செய்க’ என்று கூறி, அவர்கட்குப் பெண்உடை தரித்துச் சோணாடு செல்ல விடுத்தான்; சேனை வீரரைக் கப்பல்களில் சென்று சோணாட்டைத் தாக்கும்படி ஏவினான். கப்பல்களில் சேனைத் தலைவர் இருவர் செல்ல இருந்தனர். அவ்வேளை, ஈழப்படைகளில் இருந்த வேளைக்காரப் படையினர் (தமிழர்) தாம் சோணாடு செல்ல முடியாதெனக் கூறிக் கலகம் விளைத்தனர்; சேனைத் தலைவர் இருவரையும் கொன்றனர்; பொலநருவாவைக் கொள்ளையிட்டனர்; அரசனது தங்கையையும் அவளுடைய மக்கள் மூவரையும் சிறைப்பிடித்தனர்; அரண்மனையைத் தீக்கிரை ஆக்கினர்.

விசயபாகு தென்மாகாணம் நோக்கி ஓடினான். தன் செல்வத்தை ஒளித்துவைத்து, தக்க படையுடன் பொல நருவாவை அடைந்தான், கடும்போர் செய்து பகைவரை ஒடச் செய்தான்; பிறகு அவர்களில் தலைவராயினாரைப் பிடித்துக் கைகளைக் கட்டி நிற்க வைத்துச் சுற்றிலும் தீ மூட்டிப் பழிக்குப் பழி வாங்கினான். எனினும், இதனுடன் விசயபாகு நின்றானில்லை; தனது 45ஆம் ஆட்சி ஆண்டில் தக்க படையுடன் கீழக் கடற்கரையில் சோழனை எதிர்பார்த்து நின்றிருந்தான். சோழ அரசன் வராததைக் கண்டு சலிப்புற்று மீண்டான் இந்நிகழ்ச்சி ஏறத்தாழக் கி.பி. 1088-இல் நடந்ததாகும்.[1]

இந்நிகழ்ச்சிகட்குப் பிறகு குலோத்துங்கன் விசயபாகுவுடன் நண்பன் ஆனான், ஈழத்தில் பாண்டியன் கட்சியைச் சேர்ந்த சிங்கள இளவரசனான வீரப்பெரு-


  1. Cula Vamsa, (Geiger) Vol.1, pd. 216-218.

சோ. வ. 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/259&oldid=1233587" இலிருந்து மீள்விக்கப்பட்டது