பக்கம்:சோழர் வரலாறு.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

சோழர் வரலாறு



சென்றனனே தவிர, வேங்கி நாட்டை வென்றதாகவோ, ஆண்டதாகவோ கூறச் சான்றில்லை.

வேங்கியை ஆண்ட இளவரசர் : வேங்கியை ஆண்ட ஜயசிம்மன் குலோத்துங்கனிடம் நல்லெண்ணம் கொண்டவனாக இருந்ததில்லை. அவனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே கீழைக்கங்க அரசனான இராசராசன் நின்று சந்து செய்தான் போலும் அவன் விசயாதித்தற்காகக் குலோத்துங்கனிடம் போரிட்டான் என்று அவனுடைய கல்வெட்டுகள் குறிக்கின்றன. விவரம் விளங்கவில்லை. அக்கங்க அரசன் குலோத்துங்கன் மகளான இராச சுந்தரி என்பவளை மணந்து கொண்டான்.

ஜயசிம்மன் கி.பி. 1076-இல் இறந்தான். உடனே குலோத்துங்கன் தன் மக்களுள் ஒருவனான இராச ராச மும்முடிச் சோழன் என்பவனை வேங்கி நாட்டை ஆளும்படி அனுப்பினான். இவன் ஓராண்டு அந்நாட்டை ஆண்டு, விட்டுவிட்டான். கி.பி.1077-ல் மற்றோர் இளவரசனான வீர சோழன் ஆளத் தொடங்கினான். அவன் ஆறு ஆண்டுகள் வேங்கியை ஆண்டான். கி.பி.1084 முதல் 1089 வரை மற்றொரு மகனான இராசராச சோழ கங்கன் என்பவன் வேங்கி நாட்டை ஆண்டான். இவனே குலோத்துங்கனது மூத்த மைந்தன். கி.பி.1089-இல் மீண்டும் வீர சோழனே வேங்கி நாட்டை ஆண்டுவர அனுப்பப்பட்டான். அவன் கி.பி. 1092-93 வரை அந்நாட்டை ஆண்டுவந்தான். கி.பி.1093 முதல் 1118 வரை விக்கிரம சோழன் என்ற மற்றோர் இளவரசன் வேங்கி நாட்டை ஆண்டான். இம்மைந்தனே குலோத்துங்கற்குப் பிறகு சோழப் பேரரசன் ஆனவன்.

முதற் கலிங்கப் போர்: இது குலோத்துங்கனது ஆட்சி ஆண்டு 26-இல் (கி.பி. 1006-இல்) நடந்தது. இப்போர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/262&oldid=492426" இலிருந்து மீள்விக்கப்பட்டது