பக்கம்:சோழர் வரலாறு.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

271


தளைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம் பதியிற் சேமித்து வைத்தான்[1]. இவ்வீரன் திருவதிகைக் கோவிலில் காமகோட்டம் எடுப்பித்துப் பொன் வேய்ந்தான்; அடரங்கு அமைத்தான்; வேள்விச் சாலை ஒன்றை அமைத்தான்; தேவதானமாக நிலங்களை விட்டான். இங்ஙனம் இப் பெரியோன் செய்த திருப்பணிகள் பல ஆகும். இவற்றை விளக்கக்கூடிய வெண்பாக்கள் சிதம்பரம் கோவிலிலும் திருவதிகைக் கோவிலிலும் வரையப்பட்டுள்ளன[2].

அரசன் விருதுப் பெயர்கள் : இராசகேசரி முதல் குலோத்துங்க சோழதேவன், திரிபுவன சக்கரவர்த்தி, இராசேந்திரன், விஷ்ணுவர்த்தனன், சர்வலோகாச்ரயன், பராந்தகன், பெருமான் அடிகள், விக்கிரம சோழன், குலசேகர பாண்டிய குலாந்தகன், அபயன், சயதரன் முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தான். திருநீற்றுச் சோழன் என்ற பெயரும் இவனுக்குண்டு. இப்பெயரால் ஒரு சிற்றூர் இருந்தது. ’சுங்கம் தவிர்த்த சோழன்’ என்றும் குலோத்துங்கன் பெயர் பெற்றான். ‘உலகுய்ய வந்தான், விருதராச பயங்கரன்’ என்பனவும் குலோத்துங்கன் சிறப்புப் பெயர்களே என்பது பரணியால் தெரிகிறது.

நாட்டுப் பிரிவுகள் : குலோத்துங்கன் ஆட்சியில் இருந்த சோழப் பெருநாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அவை (1) சோழ மண்டலம் (2) சயங் கொண்ட சோழ மண்டலம் (3) இராசராசப் பாண்டிமண்டலம் (4) மும்முடிச் சோழ மண்டலம் (5) வேங்கை மண்டலம் (6) மலைமண்டலம் (7) அதிராசராச மண்டலம் என்பன. இவற்றுள் சோழ மண்டலம் என்பது தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளிக் கோட்டங்களும் தென் ஆர்க்காடு கோட்டத்தின் ஒரு பகுதியும் தன்னகத்தே


  1. S.I.I. Vol. 4, 225.
  2. 369 of 1921; M.E.R. 1921; Vide ‘Sentamil’ Vol.23
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/273&oldid=1233630" இலிருந்து மீள்விக்கப்பட்டது