பக்கம்:சோழர் வரலாறு.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

287



பிற்காலத்தில் சோழப் பேரரசையே ஆட்டங்கொள்ளச் செய்த கோப் பெருஞ்சிங்கன் ஆவன்[1].

3. நடு நாடு அல்லது மகதை நாடு என்பதைப் பார்வையிட்டு வந்த தலைவன் பாணர் மரபினன். அவன் பெயர் ‘இராசராச மகதை நாடாள்வான்’ என்பது[2]. 4. திருக்கோவலூரைச் சேர்ந்த மலை நாட்டை ஆண்டவன் ‘விக்கிரம சோழச் சேதிராயன்’ என்பவன். அவன் மகன் ‘விக்கிரம சோழக் கோவல (கோவலூர்) ராயன்’ என்பவன். மற்றொருவன் கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழச் சேதியராயன்’ என்பவன்[3]. 5. தகடூர் அதியமான் ஒருவன், 6. நுளம்ப பல்லவர் சிலராவர் - 7. கி.பி. 1147-இல் கங்க மரபினனான சீயகங்கன் காளத்தியில் உள்ள சிவன் கோவிலுக்கு நிபந்தங்கள் விடுத்தனன்[4]. 8. காளத்தியைச் சுற்றியுள்ள பகுதியில் ‘யாதவராயர்’ என்ற மரபரசர் சிற்றரசராக ஆண்டுவந்தனர்[5]. இம்மரபினர் வீர ராசேந்திரன் காலமுதலே சிற்றரசராக இருந்துவந்தவர் ஆவர். 9. வேங்கி நாட்டுச் சிற்றரசருள் ‘மகா மண்டலேசுவரன் பல்லவ தேவ சோடன்’ ஒருவன்[6]. 10. வெலனாண்டுச் சோழர் மற்றொரு கிளையினர். இம்மரபைச்சேர்ந்த அரசரும் அரச மாதேவியாரும் பாபட்லா, திராக்ஷாராமம், காளத்தி இவற்றிலுள்ள சிவன் கோவில்கட்குத் திருப்பணிகள் பல செய்துள்ளனர்[7]. 11. ‘கொலுறு’வை ஆண்ட ‘காடம நாயகன்’ ஒருவன். இவன் கி.பி.142-இல் ஒரு சிற்றுரரை வேதியர்க்குப்பிரமதேயமாக விட்டனன்[8]. இவன், மகாமண்டலிக பீம நாயகன், வேங்கி தேசச் சாளுக்கிய அங்ககாரன் என்ற பட்டங்களையும்


  1. 137 of 1900
  2. 14 of 1903
  3. 284, 285 of 1902
  4. 63 of 1922
  5. 83, of 1922
  6. 210 of 1897
  7. 210 of 1897, 227 of 1893, 123 of 1922
  8. Ind, Ant. Vol 14. pp. 56-60
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/289&oldid=493948" இலிருந்து மீள்விக்கப்பட்டது