பக்கம்:சோழர் வரலாறு.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

295



இளவரசன் : இராசராசற்கு மகப்பேறு இன்மையால், தன் பாட்டனான விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரனான (இரண்டாம்) இராசாதிராசன் என்பானை இளவரசனாக ஏற்றுக் கொண்டான். இளவரசனது ஆட்சி ஆண்டு கி.பி.1153-இல் தொடக்கமானதைக் கல்வெட்டு உணர்த்துகிறது[1]. எனவே, இராசாதிராசன் பத்தாண்டு வரை இராசராசனுடன் இருந்து அரசியல் முறையை நன்கறிந்தான் என்னலாம். கி.பி.1153-க்குப் பிறகு இராசராசன் இறப்பதற்குள் பாண்டிய நாட்டில் பெருங்குழப்பம் பாண்டிய சிற்றரசர்க்குள் உண்டானது. ஒரு பாண்டியற்கு ஈழத்தரசன் உதவி செய்தான். மற்றொருவருக்கு சோழர் உதவி புரிந்தான். இப்போராட்டச் செய்திகளைப் பற்றிய விவரம் இராசாதிராசன் ஆட்சியில் விளக்கப்படும்.


5. இராசாதிராசன்
(கி.பி. 1163 - 1179)

பட்டம் பெற்ற வரலாறு : இராசாதிராசன் விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரன். இவனது இயற்பெயர் எதிரிலிப்பெருமான் என்பது. இவனுக்கு இளையவன் ஒருவன் இருந்தான். இந்த இருவரும் கங்கை கொண்ட சோழ புரத்திலிருந்து ஆயிரத்தளி அரண்மனைக்குக் கொண்டுவரப் பெற்றனர். அங்கு இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து வந்தனர். இராச ராசன் இறக்கும் அன்று எதிரிலிப் பெருமாளுக்கு முடிசூட்டி இறந்தான். அப்பொழுது இவன் வயது இரண்டு. அதனால் அரசன் இறந்தவுடன் சோணாட்டில் கலவரம் மிகுந்தது. உடனே பல்லவராயன் என்னும் முதல் அமைச்சர் இப்பிள்ளைகளையும் இராச மாதேவி யாரையும் இராசராசபுரத்திற்குக் கொண்டு சென்று


  1. Ep. Ind. Vol. 9, p.211
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/297&oldid=1234271" இலிருந்து மீள்விக்கப்பட்டது