பக்கம்:சோழர் வரலாறு.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

சோழர் வரலாறு



என்பவனே குமார குலோத்துங்கன் என்ற மூன்றாம் குலோத்துங்கன்; மூன்றாம் மகன் சங்கர ராசன். இவனே சங்கர சோழன் என்பவன். இம்மூவரும் ஒரே தந்தையின் மக்களாவர்.[1] ஆதலின், மூன்றாம் குலோத்துங்கனே இளவரசனாக இருந்தான்.


6. மூன்றாம் குலோத்துங்கன்
(கி.பி. 1178 - 1218)

இளமைப்பருவம்: இராசாதிராசனுக்கு இவன் தம்பியாவன் என்பது உண்மை ஆயின் அவனுக்கு ஒராண்டு இளையவனே ஆவன். எனவே இராசாதிராசன் பட்டம் ஏற்றபொழுது இவன் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தான்; தமையனுடனே இருந்து அரசியல் பழக்கம் சிறுவயதிலே கைவரப் பெற்றான். தமையன் 17 ஆண்டுகள் அரசாண்டு 20-ஆம் வயதில் இறந்தானாதல் வேண்டும். இவன் கி.பி. 1178-இல் தன் 18ஆம் வயதில் பட்டத்தைப் பெற்றான் நல்ல இளமைப் பருவத்தில் பட்டம் பெற்றமையானும் அதற்குள் தமையனுடன் இருந்து அரசியல் அமைதியை நன்கு அறிந்திருந்தவன் ஆதலாலும், சிறுவயதில் அரசமாதேவியார் பக்கலில் இருந்து வளர்ந்தமையாலும் பெருநாட்டின் நிலையையும் அரசமரபின் வரலாற்றையும் பிறவற்றையும் நன்கறிந்தவன். இளமைப் பருவத்தில் ஒட்டக்கூத்தர் போன்ற பெரும் புலவர் பழக்கம் இவனுக்கு இருந்திருத்தல் இயல்பே அன்றோ?

பிறந்த நாள் : இப்பேரரசன் பிறந்த நாள் தைத்திங்கள் அத்த நக்ஷத்திரம் ஆகும். இவன் தன் பெயரால், திருநறுங்கொண்டைப் பெரும்பள்ளி அருகதேவற்கு


  1. Vide V.R. Dikshitar's ‘Kulothunka III. pp. 160-163. லால்குடிக்கு நேர்கிழக்கே 5 கல் தொலைவில் ‘சங்கரராசபுரம்’ என்னும் பெயர்கொண்ட சிற்றுார் இருக்கிறது. இவ்வூரில் உள்ள கோவில் கல்வெட்டுகள் சோதித்தற்குரியவை. V.R. Dikshitar's K-III.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/306&oldid=1234274" இலிருந்து மீள்விக்கப்பட்டது