பக்கம்:சோழர் வரலாறு.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

305



“ஆறாவது முதல் நம்பேராலே இராசாக்கள் நாயன் திருநாள் என்று தைத்திங்களில் அத்தத்திலே தீர்த்தமாகத் திருநாள் எழுந்தருளுவிப்பதாகச் சொன்னோம்”[1] என்று கட்டளையிட்டுள்ளதனால் இது தெரிகின்றது. இங்ஙனம் முதல் இராசராசன் தான் வென்ற சேரநாட்டில் தன் பிறந்தநாள் விழாக் கொண்டாட ஏற்பாடு செய்ததை முன்னர்ப் படித்தோம் அன்றோ?

உடல் அமைப்பு : இவன் கருவீர மேகம், கருமேக வண்ணன், ஒண்பூவை வண்ணன், உருவால் மதனன்; உறுப்பால் மதனன், கட்டாண்மை வீமன், அழகு, ஆண்மை எல்லாம் கண்டார் கொண்டாடும் குலோத் துங்கன் சோழன்’ என்று குலோத்துங்கன் கோவை ஆசிரியர் இவனைப் பற்றிக் கூறியுள்ளனர்.

கல்வெட்டுகள் : இவன் காலத்துக் கல்வெட்டுகள் பலவாகும். அவற்றில் பெரிதும் காணப்படும் தொடக்கம் ‘புயல் வாய்த்து வளம்பெருக’ என்பது. பிற தொடக்கங்கள் ஆவன-‘மலர் மன்னும் பொழில் ஏழும்’ பூமேவி மருவிய’, ‘பூமேவிவளர்’, ‘பூமருவிய திசைமுகத்தோன்’ என்பன. இவற்றுள் சில இரண்டாம் இராசராசன், இரண்டாம் குலாத்துங்கன் கல்வெட்டுத் தொடக்கங்கள் எனினும், போர்ச் செயல்களைக் கொண்டு வேறு பிரித்துக் காட்டலாம்.

நாட்டு நிலைமை : மூன்றாம் குலோத்துங்கன் அரசு கட்டில் ஏறிய ஞான்று சோழப் பெருநாடு திறமை மிக்க அமைச்சரால் திறம்பட ஆளப்பட்டு வந்தது. ஆயினும், பெருநாட்டு நடு அரசியல் அமைப்புச் சீர்கெட்டுக் கொண்டே வந்தது. இதற்குச் சிறந்த காரணம், சிற்றரசரும் படைத்தலைவரும் உயர் அலுவலாளரும் தம் நாடுகளில் தனிப்பட்ட உரிமைகளை நாட்டிக்கொண்டு நடு அரசியல் அமைப்பை மதியாது நடந்து வந்ததே ஆகும். இந்நிலைமை


  1. M.E.R. 458 of 1915.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/307&oldid=1234275" இலிருந்து மீள்விக்கப்பட்டது