பக்கம்:சோழர் வரலாறு.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

சோழர் வரலாறு



உடனே மட்டியூர், கழிக்கோட்டை என்ற இடங்களிற் கடும்போர் நடந்தது. அதிகம் அறைவதேன்? குலசேகரன் படை அழிந்தது. அவன் காடுகளிற் புக்கு ஒளித்தான். உடனே சோழப்படை மதுரையைக் கைப்பற்றியது: அரண்மனையுள் முடிசூட்டு மண்டபம் முதலியவற்றை இடித்து அழித்தது; அவ்விடங்களைக் கழுதை ஏர் கொண்டு உழுது வரகு விதைத்துப் பாழ் படுத்திவிட்டது. இங்ஙனம் மதுரை பாழானது. குலோத்துங்கன் சீற்றமும் தணிந்தது. இப்பெருமகன் மதுரையில் ‘சோழ பாண்டியன்’ என்ற பட்டமும், வீரமாமுடியும் தரித்து வெற்றித்துரண் நாட்டினான்; இங்ஙனம் பாண்டியனையும் சேரனையும் வென்றமையால் திரிபுவன வீரன் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான். இப்போருக்குப் பின்னர்ப் பாண்டி மண்டலம் ‘சோழபாண்டிமண்டலம்’ எனப்பெயர்பெற்றது:சோழரது நேர் ஆட்சியில் அடங்கி விட்டது. மதுரை ‘முடித்தலைகொண்ட சோழபுரம்’ எனப்பட்டது; மதுரை அத்தாணி மண்டபம் ‘சேர பாண்டியர் தம்பிரான்’ எனப் பெயர் பெற்றது. இங்ஙனம் பெரு வெற்றி பெற்ற குலோத்துங்கன் மதுரையில் விசய அபிடேகமும் வீர அபிடேகமும் செய்துகொண்டான் என்று அவன் புதுக்கோட்டைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.[1] குலோத்துங்கன் கொண்ட இப்பெரு வெற்றி கி.பி. 1201-ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில் இவன் ‘திரிபுவன வீரதேவன்’ எனக் கூறப்பட்டிருத்தலின் என்க.

வட நாட்டுப் போர் : குலோத்துங்கன் ‘ஏழு கலிங்கமும் கொல்லாபுரமும் உரங்கை, (ஓரங்கல்) பொருதோன்’ என்று


  1. 163, 166 of Pudukkota Inscriptions.
    இங்ஙனமே பிற்காலத்தில் வீரபாண்டியன் என்பவன் சோணாட்டைக் கைப்பற்றித் தில்லையில் இவ்விரு அபிடேகங்களையும் செய்து கொண்டான். சுந்தரபாண்டியன் பிற்காலத்தில் இக் குலோத்துங்கன் செய்தவை அனைத்தும் சோணாட்டில் செய்தான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/314&oldid=1234286" இலிருந்து மீள்விக்கப்பட்டது