பக்கம்:சோழர் வரலாறு.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

சோழர் வரலாறு



ஒருவனான எழினி, திருமலை மீது வைத்த யக்ஷன் யகசினி படிமங்களைப் புதுப்பித்தான் என்று திருமலைக் கல் வெட்டு கூறுகிறது[1].

கங்கர் : இம் மரபினர் கங்கபாடியை ஆண்ட சிற்றரசர் இவர்கள் சங்க கால முதல் கங்கபாடியை ஆண்டு வந்தவர்; பல்லவர் காலத்தில் அவர் உதவிபெற்றுக்கதம்பருடன் அடிக்கடி போரிட்டவர்; பிற்காலச் சோழர் ஆட்சியில் சோழர்க்கு அடங்கிய சிற்றரசராக வாழ்ந்துவந்தனர். இவர் தம் தலைநகரம் கோலார் எனப்படும் ‘குவலாளபுரம்’ என்பது, இந்நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்க்குட்பட்ட கங்கபாடியை ஆண்டவருள் ‘பங்களநாட்டுப்பிருதிவி கங்கன் அழகிய சோழன்’ ஒருவன்; ‘உத்தம சோழ கங்கன்’ ஒருவன்; மற்றொருவன் மராபர ணன் சீயகங்கன் என்பவன்[2]. இவன் 33 ஆண்டுகள் அரசாண்டவன். இவன் மனைவி பெயர் அரிய பிள்ளை[3] என்பது. இவன் கல்வெட்டுகள் எல்லாம் தமிழில் உள்ளன. இவன் தமிழ்நாட்டுக் கோவில்கட்கே நிபந்தங்கள் விடுத்துள்ளான்; தமிழ்ப் புலவர்களையே ஆதரித் துள்ளான். பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல் செய்வித்தவன் இவனே. கங்க நாட்டு அரசனான இவன் கன்னடம் அல்லது துளுவத்தைப் போற்றி வளர்க்காமல் தமிழை வளர்த்ததும் தமிழிலே பெயர்கள் கொண்ட மையும் தமிழ்நாட்டுத் தலங்கட்கே நிபந்தங்கள் விடுத்ததும் பாராட்டற்பாலனவே ஆகும்.இத் தமிழ்ப்பற்று, அருங்கலை விநோதனான மூன்றாம் குலோத்துங்கன் தொடர்பால் உண்டாயிற்று எனின், மிகையாமோ?

சீயகங்கனைத் தவிர அம்மரபைச் சேர்ந்த பிறருள் பிருதிவிகங்கன் அழகிய சோழன் என்பவன் ஒருவன்.இவன்


  1. S.I.I. Vol. 1, No.75
  2. M.E.R. 1 16 of 1992
  3. S.I.I. Vol.3, No.62
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/322&oldid=493407" இலிருந்து மீள்விக்கப்பட்டது