பக்கம்:சோழர் வரலாறு.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

சோழர் வரலாறு



திருமால் கோவிலுக்கு மூன்று சிற்றுார்களை ஒன்றாக்கிக் ‘குலோத்துங்க சோழநல்லூர்’ எனத்தன் பெயரிட்டுத் தேவதானமாக அளித்தான்; அக்கோவிற்குக் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ எனப்பெயரிட்டான்.[1] இவன் இசைவு பெற்றுத் திருக்கோவலூர் மலையமான்கள் செய்த பெருமாள் திருப்பணிகள் பலவாகும். இங்ஙனமே பிறரும் செய்துள்ளனர்.

சமணத் திருப்பணி : இவனது ஆட்சியில் மண்டியங் கிழான் குலோத்துங்கசோழக் காடுவெட்டி என்பவன் ஒர் உயர்அலுவலாளன் ஆவன். இவன் சமணப் பற்றுடையவன் ஆவன். இவன் வேண்டுகோளின்படி குலோத்துங்கன், சைனக் கோவில் ஒன்றுக்கு 20 வேலி நிலம் பள்ளிச் சந்தமாக விட்டான், சமண குருவான ‘சந்திரகிரி தேவர்’ என்பார்க்குக் கொட்டையூர் ஆசிரியப்பட்டம் கொடுத் தருளி, அம்பையிலே 20 வேலி நிலம் தானமாக அளித்தான்.[2] இப்பெருந்தகையாளன் இவற்றுடன் நிற்கவில்லை; திருநறுங்கொண்டைச் சமணப் பெரும் பள்ளிக்கு வேண்டிய நிபந்தங்களுக்கும் அமணப் பிடாரர்க்கும் பத்துவேலி நில வருவாயை இறையிலி செய்துள்ளான்; ‘இந்நிலத்துக்கு அமணப்பிடாரர் சொன்னவாறு செய்வது; இவர் வசமே இருக்க’ எனத் திருவாணையும் பிறப்பித்தான்; அப்பெரும் பள்ளியிற் கோவில் கொண்டிருந்த அப்பாண்டார் வைகாசித் திருநாளுடனே தன் பெயராலேயும் (‘இராசாக்கள் நாயன் திருநாள்’ என்பது) ஒரு திருநாள் நடத்த ஏற்பாடு செய்து, அவ்விழாவிற்காகத் தனியே நிலம் அளித்துள்ளான்.[3]

சுருங்கக்கூறின், இவனது ஆட்சியில் எல்லாச்சமய நிலையங்களும் சிறப்புப்பெற்றன எனலாம்; கோவில்கள் செம்மையாக மேற்பார்வை இடப்பட்டன; விழாக்கள்

  1. M.E.R. 114 of 1919.
  2. S.I.I. Vol. 4, No.366
  3. S.I.I. Vol. 7, 1011-1014
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/330&oldid=493939" இலிருந்து மீள்விக்கப்பட்டது