பக்கம்:சோழர் வரலாறு.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

339



வீரரையும் தன் வீரரையும் காடுகளிற் பதுங்க வைத்திருந்தவனுமான கோப்பெருஞ் சிங்கன் அரசனை வழிமறித்துப் போரிட்டான் இறுதியில் தன் பேரரசனைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றான், சேந்தமங்கலத்தில் அவனைச் சிறை வைத்தான்[1]; தன் வீரரை ஏவிச் சோணாட்டு விஷ்ணு கோவில்களை அழித்தான்.

ஹொய்சள நரசிம்மன் : சோணாட்டுத் துன்ப நிலையைக் கேள்வியுற்ற நரசிம்மன் தன் தலைநகரமான துவா சமுத்திரத்தை விட்டுப்பெரும்படையுடன் புறப்பட்டான். வழியில் மகதை நாடான நடுநாட்டரசனைப்போரில் தோற்கடித்துக்காவிரிக் கரையை அடைந்தான்; அங்குத் தன் படையை இரண்டாகப் பிரித்து, ஒன்றைத்தான் வைத்துக்கொண்டான்; மற்றொன்றைத் தன் தண்ட நாயகனான அப்பண்ணன், சமுத்திர கொப்பையன் என்பவரிடம் ஒப்படைத்துச் சோழ அரசனை மீட்டு வருமாறு ஏவினன்.[2]

அரசன் விடுதலை : நரசிம்மனுடைய தண்டநாயகர் கோப்பெருஞ்சிங்கன் நாட்டைச் சேர்ந்த என்னேரி, கல்லியூர் மூலை முதலிய ஊர்களைக் கொள்ளை அடித்தனர்; அவனது தலைவனான சோழர்கோன் என்பானது தொழுதகை யூரையும் கொள்ளையடித்தனர்; இராசராசனுக்கு மாறாக இருந்த முதலிகளைக்கொன்றனர்,கோப்பெருஞ்சிங்கனுடன் சேர்ந்திருந்த ஈழநாட்டு இளவரசன் ஒருவனைக்கொன்றனர்; பிறகு தில்லை நகரில் கூத்தப்பெருமானை வணங்கினர்; மேலும் சென்று தொண்டைமான் நல்லூர், திருவதிகை, திருவக்கரை முதலிய ஊர்களை அழித்துச் சேந்தமங்கலம் சேர்ந்தனர்; அங்குப் பயிர்களுக்குத் தீ இட்டனர்; பெண்களைக் கைப்பற்றினர்; குடிகளைக் கொள்ளை யடித்தனர். குடிகள் பட்ட கொடுமைகளையும் கண்ட


  1. M.R. Kavi in Thirumalai Sri Venkatesvara’ VI pp, 677-678.
  2. 142 of 1902
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/341&oldid=493369" இலிருந்து மீள்விக்கப்பட்டது