பக்கம்:சோழர் வரலாறு.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

சோழர் வரலாறு



கோப்பெருஞ்சிங்கன்,சோழ அரசனை விடுதலை செய்வதாக நரசிங்கற்குச் செய்தி சொல்லி அனுப்பினான். நரசிங்கன் கட்டளைப்படி தண்டநாயகர், விடுதலை அடைந்த இராசராசனை மகிழ்ச்சியோடு வரவேற்றுச் சோழநாடு கொண்டு சென்றனர்.

பாண்டியன் தோல்வி : தன் தானைத்தலைவர் அரசனை மீட்கச்சென்றவுடன் நரசிம்மன்,தன்னிடமிருந்த படையுடன் பாண்டியனைத் தாக்கினான்; மகேந்திர மங்கலத்தில் போர் கடுமையாக நடந்தது. சுந்தர பாண்டியன் போரில் தோல்வியுற்றான். நரசிம்மன் இராமேசுவரம் வரை சென்றுமீண்டான். பாண்டியன் நரசிம்மனுக்குக் கப்பம் கட்டுவதாக ஒப்புக் கொண்டான் என்று ஹொய்சளர் கல்வெட்டுக் கூறுகிறது. பாண்டியன் மெய்ப்புகழ், அவன் விசய அபிடேகம் செய்து கொண்டவரைதான் கூறியுள்ளது. இராசராசன் மீட்சி, அவன் மீட்டும் சோணாட்டு அரசன் ஆனது, இவைபற்றிய செய்தி பாண்டியன் கல்வெட்டில் இராததாலும், பாண்டி நாட்டுக்குச் சோணாடு உட்படவில்லை ஆதலாலும், நரசிம்மனிடம் சுந்தர பாண்டியன் தோல்வியுற்றது உண்மை என்றே தெரிகிறது.[1]

முடிவு : ஹொய்சள நரசிம்மனது இடையீட்டால் இராசராசன் இரண்டாம் முறையும் அரசன் ஆக்கப்பட்டான். சுந்தரபாண்டியனும் தன் செருக்கு அழிந்து ஒடுங்கினான். ஆயின், ஹொய்சளர் செல்வாக்குச் சோழ - பாண்டிய நாடுகளில் பரவிவேரூன்றியது.இரு நாடுகளிலும் ஹொய்சள உயர் அலுவலாளரும் தண்டநாயகரும் ஆங்காங்கு இருந்து வரலாயினர். காஞ்சிபுரத்தில் நிலையாகவே ஹொய்சளப் படை இருந்து வந்தது.

சீரழிந்த அரசாட்சி :

அரசத் துரோகம் : மேற் கூறப்பெற்ற குழப்பங்களிற் சம்பந்தப்பட்டதாலோ, பிறகு எஞ்சிய ஆட்சிக்காலத்தில்


  1. K.A.N. Sastry's ‘Cholas’, II, p.185
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/342&oldid=493370" இலிருந்து மீள்விக்கப்பட்டது