பக்கம்:சோழர் வரலாறு.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாராட்டுரை

நாவலர்

25-1-'47

ச. சோமசுந்தர பாரதியார், M.A., B.L.,

பசுமலை

To

சென்னை வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள், B.O.L., L.T., M.O.L.,

அன்பார்ந்த ஐயா,

நலம். நானங்கு நாடுவதும் நலமே. தாங்கள் அன்போடனுப்பிய சோழர் வரலாறு - மூன்று பகுதிகளும் வரப்பெற்றேன்; படித்து மகிழ்வுற்றேன். இனிய எளிய நடையில், கனியு மதுர மொழியால், பொன்னி வளநாட்டுப் புகழ்ச் சோழர் பொன்கால வரலாறு தமிழருக்குத் தந்த பெருமை. தங்களதென்பதில் தடையில்லை. நடுநிலையில் நெடு நாளாய்ந்து, பழம் பாடல், இடைக்காலச் சான்றோர் நூல், கல்வெட்டு, செப்பேடுகள் அனைத்தும் துருவி, தற்கால ஆராய்ச்சியாளர் கருத்துகளை அலசி, நேர்மை வழுவாத நன்முடிபுகளைக் கண்டு வெளியிட்ட தமிழ்ச்சரித வரிசையிலே தங்கள் கட்டுரைகள் சிறப்பிடம் பெறுவதில் ஐயமில்லை. தங்கள் குலோத் துங்கன் வரலாறும், பிற உரைகளும் சோழர் வரலாற்றுக்குச் சார்பும் துணையும் தந்து வளம் நிறை பாராட்டுக்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/5&oldid=950587" இலிருந்து மீள்விக்கப்பட்டது