பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் II. ழாங்கவர்க் கவர்நா டருளிப் பாங்குறு தென்னவர் மூவருள், மானாபரணன் பொன்முடி ஆனாப் பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து வாரள வியகழல் வீரகே ரளனை முனைவயிற் பிடித்துத் தந்தி வாரணக் கதக்க ளிற்றா னுதைப்பித் தருளி அந்தமில் பெரும்புகழ்ச் சுந்தரபாண்டியன் கொற்றவெண் குடையுங் கற்றைவெண் கவரியும் சிங்கா தனமும் வெங்களத் திழந்துதன். முடிவிழத் தலைவிரித் தடிதளர்ந் தோடத் தொல்லை முல்லையூர்த் துரத்தி ஒல்கலில் வேணாட் டாசரைச் சேணாட் டொதுக்கி மேவுபுக ழிராமகுட மூவர்கெட முனிந்து மிடல்கெழு வில்லவன் குடர்மடிக் கொண்டு தன் னாடுவிட் டோடிக் காடுபுக் கொளிப்ப வஞ்சியம் புதுமலர் மலைந்தாங் கெஞ்சலில் வேலைகெழு காந்தளூர்ச் சாலை கலமறுத் தாஹவ மல்லனு மஞ்ச கேவுதன் றாங்கரும் படையா லாங்கவன சேனையுட் கண்டப் பயனும் கங்கா தரனும் வண்டமர் களிற்றொடு மடியத் திண்டிறல் விருதர் விக்கியும் விசையா தித்தனுங் கருமுரட் சாங்க மய்யனு முதலினர் சமர பீருவொத் துடைய விரிசுடர்ப் பொன்னோ டயங்கரிப் புரவியொடும் பிடித்து தன்னா டையிற் சயங்கொண் டொன்னார் கொள்ளிப் பாக்கை யுள்ளெரி மடுப்பித் தொருதனித் தண்டாற் பொருகட விலங்கையர் கோமா விக்கிரம பாஹுவின் மகுடமு முன்றனக் குடைந்த தென்றமிழ் மண்டல முழுவ தும்மிழந் தெழுகட லீழம் (18) தெண்டமிழ் 19 (19) நேலுகட்