பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். யேனும் ஒருவாறு அறிந்திருத்தல் நலமென்று கருதி, சோழசரித் திரத்தை என்னாலியன்றமட்டும் தொடர்ச்சியாக எழுதத்துணிந்தேன். இவ்வாறு நான் எழுதக்காரணமாயிருந்தது, மகாமகோபாத்தி யாயர் ஸ்ரீமத்-சாமிநாத ஐயரவர்கள் தூண்டுதலே. ஐயாவர்கள் சென்ற வருடம் மூவருலாக்களைப் பதிப்பிக்க முயன்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அவ்வுலாக்களின் நாயகர்களாகிய சோழவரசர் மூவாது சரித்திரமும் விளங்கும்படி மார் சிறுவியாசம் எழுதிக்கொடுக்கக் கட்டளை யிட்டனர். அக்கட்டளைபைச்சி மேற்கொண்டு சோழவமிச் சரித்திர முழுதுமெழுதின், உலாக்களில் வருணிக்கப்படும் சோழர்களின்சரித்திரம் நன்கு புலப்படுமென்று சென்றவருடமே எழு முடித்தும் இது நாறும் அச்சிற்குக்கொண்டுவர முடியாமற் சிற்சில இடையூறுகள் நேர்ந்தன. இச்சரித்திரத்தை, மதுரைத் தமிழ்ச் சங்கத்து அக்கிராசனாதிபதியாகிய ஸ்ரீமாந். பாண்டித்துரைத்தேவரவர்கள், இதற்குத் தாங்களே ஒரு முகவுரையெழுதி, தமிழ்ச்சங்கத்தில் பதிப்பிப்பதாய் வாக்களித்தார்கள். இவ்வாறு ஸ்ரீமாந். தேவரவர்கள் கயவுகூர்ந்து என்னை ஊக்கியதும் ஸ்ரீ ஐயரவர்கள் என்னை இச்சரித்திரமெழுதத் தூண்டியதும் என்னால் எப்பொழுதும் மறவாது பாராட்டத்தக்கன. (இந்தியதேச சரித்திரம் மிகுதியும் சாஸனங்களைக்கொண்டே எழுத வேண்டியிருத்தலின், இச்சாஸனங்கள் முழுதும் பரிசோதித்து முடிந் தாலன்றிர் சரித்திரங் குறைவற எழுதவியலாது) ஆதலால் இது காறும் வெளிவந்த சாஸனங்கள் பலவற்றையும், வெளிவராச் சிலவற்றையும் ஆதாரமாகக்கொண்டு எழுதிய இந்நூலில் குற்றங்குறைகள் பலவா யிருக்கக் கூடுமாதலால், குணமேதேனுமிருப்பின் அ த னை மட்டும் ஆன்றோர் கிரசித்துக்கொள்வாராக. து. அ. கோபிநாதராவ். திருவல்லிக்கேணி. 1st May, 1906.