பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். மதுரையும் ஈழமும் வென்றுகொண்டபிறகு, வைதும்பவரசனாகிய சந்தயன் என்பவனையும், வாணவரசர்களிருவரையும் தோற்கச்செய்து, வாணர்கள் நாடாகிய வாணகப்பாடியை, அவர்களிடத்துப் பெண் கொண்ட கங்கவம்சத்தானாகிய இரண்டாம் பிரதிவிபதிக்குக் கொடுத்துச் செம்பியன்மாவலிவாணராயன் என்னும் பெயரால் முடிசூட்டுவித்து, தனக்குக்கீழ்ப்படிந்த சிற்றரசனாக்கிக்கொண்டான். இப்பிரதிவிபதி க்கு வீரசோழனென்னும் மற்றோர் பெயரும் உண்டு. பராந்தகனால் வெல்லப்பட்டவாணர்கள் விஜயாதித்தனு(IV)ம், அவன் தந்தை வித்தி யாதரனுமாக வேண்டும். வாணர்கள், வடஆர்க்காடு ஜில்லாவில் சில பாகமும், தென்னார்க்காடு ஜில்லாவில் சில பாகமும் ஆண்டுவந்த பல சாலிகளாகிய சிற்றாசர்கள். இவர்களாண்டுவந்த நாட்டுக்கு, வாணகப் பாடி அல்லது வடுகவழிமேற்கு என்று பெயர். பராந்தகன் பலராச்சியங்களையும் வென்றுகொண்ட செல்வத்தால் தங்கள் குல தெய்வமாகிய தில்லைச்சிற்றம்பலவர்கோயிலைப்பொற்ற கட்டால் வேய்வித்தான். இவ்வரசன்பட்டத்தரசி கோளாஜன் மகள். இவளன்றி, இவ னுக்கு மற்றும் பல மனைவியரிருந்தார்கள். இவன் முதல்மகனாகிய இராஜாதித்தன் என்பவன் கோக்கிழானடிகள் என்னும் மனைவியினிடம் பிறந்தவன். இவனுடைய மற்றைய மூன்று புத்திரர்களுக்கும் பெயர் -- கண்டராதித்தன், அரிஞ்சயன், ஆதித்தனாகிய கோதண்டராமன் என் பன. கோதண்டராமன் தாய், கொடுமபாரூரைச் சேர்ந்தவளென்று தெரியவருகிறது. முதற் பராந்தகன் காலத்திலேதான் சோழராச்சியம் மிக்க பிரபல படையத் தலைப்பட்டது. அதற்கேற்ப இவ்வரசனும் 4) --வருஷ காலம் இராச்சியத்தைப் பெருக்கிச்சீர்ப்படுத்திபாண்டு பின்பு காலஞ் சென்றான. - • Udayendram Plates of Prithivipati [I. S. I. I. Vol. II. 1.3 76. t குடிமல்லத்துச்சாஸங்கள் Ep An. Rep-for 1903-4. No. 223, 224 of 1903. | Ep. Ind; Vol; VII. I'. 133.