பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். பிறகு, 16-முதல் 20-வருஷத்துக்குள் ஈழமும் (இலங்கைத்தீவு) ஜபிக்கப்பட்டது. இவ்வாசன் சாஸனங்கள், அவ்விடத்து அநுரா தாபுரமுதலான விடங்களிற் காணப்படுகின்றன. இவனுக்கு, சோழ பாண்டியகேரளராச்சியங்கள் மூன்றுக்கும் ஏசுசக்கரவர்த்தி யென்பது விளங்க, மும்முடிச்சோழனென்னும் பெயருண்டாயிற்று. இவ்விராச்சியங்களெல்லாம் வென்றுகொண்டபின், மேனாட்டுச் சளுக்கிய அரசனாகிய சத்தியாசிரயன் மீது படையெடுத்துச் சென்று, அவனை முறியடித்து வந்தானென்பது, “ஸத்யாசிரயனை எறிந்து எழுந்தருளிவந்து” என்று பலதடவை இவனால் தஞ்சாவூர் பிரஹதீ சுவரன் கோயிலில் வெட்டப்பட்ட பல சாஸனங்களால் வெளிப்படு கிறது. இவ்விராஜராஜன் காலமுதல் சோழர்களுக்கும் குந்தளர் (மேனாட்டுச்சாளுக்கியர்) களுக்கும் ஒயாப்போரே மணியமாயிற்று. மேற்கூறிய திக்குவிசயங்கள் முற்றமுடிந்தபின், இராஜராஜன் இராச்சியம் ஏறக்குறைய சென்னை ராஜதானியில் முக்கால் வரிசை விஸ்தீரணமுடையதாயிருந்தது. இவ்வரசனுக்கு முற்கூறியபடி மும் முடிச்சோழனென்பதுடன் சிவபாதசேகரன், அருண்மொழி, ராஜா சிரயன், கூத்திரியசிகாமணியென்னும் பல பெயர்களும் வழங்கின இவன் மனைவியர் தந்திசத்திவிடங்கி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன் மாதேவி, அபிமானவல்லி, சோழமாதேவி என்று ஐவரிருந்தார்கள். இவனுக்குப் பரகேசரி இராஜேந்திர சோழனைத் தவிர்த்து வேறு புத்திரர்களிருந்ததாகத் தெரியவில்லை. வேங்கைமண்டலத்தரசன் மனைவி குந்தவையைத்தவிர்த்து, இராஜராஜனுக்கு மாதேவடிகளென்னும்மற்று மொரு குமாரத்தியுமிருந்தாள். இவளைத் திருவலஞ்சுழியின் சாஸன மொன்றில் "நடுவிற் பெண்" என்று கூறுவதால், மற்றுமொரு பெண்து மிவனுக் கிருந்திருக்கவேண்டுமென்று ஊகிக்கலாம். இராஜராஜன் தன்னாட்சியில் 29-ஆம் வருஷத்தில் சலாபாரம் புக்கதையும், இவன் தர்மபத்தினியாசிய தந்திசக்திவிடக்கி இரண்ய அர்ப்பம் புக்கதையும், திருவிசலூர்ச் சாஸனம் ஒன்று அடியில் வரு மாறு குறிக்கிறச. SE. An. Rep-tor 1902-3. Na. 833 of 1902. - -