பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உக சோழவமிசசரித்திரச்சுருக்கம். வீசலா ேமகன் மாத்திரம் வெகுகஷ்டங்கட்குட்படுத்தப்பட்டான். இராஜாதிராஜன், அவன் தமக்கையையும் பெண்டாட்டியையும் பிடித்துக் கொண்டு அவன் தாயையும் மூக்கரிந்து கடைசியாக வீரசலாமேகனையும் கொன்று விட்டான். இவ்விஷயங்களெல்வாம் இவ்விராஜாதிராஜன் பெய்க்கீர்த்தியில் மாத்திரமன்றி, இலங்கைச் சரித்திரமாகிய மகாவமிசத்திலும் எழுதப் பட்டிருக்கிறது. இன்னபொருக்கால் குந்தளரோடு போர்புரியச்சென்று, இந்த முறை அவர்கள் இராஜதானியாகிய கம்பிலியைப் பிடித்துக்கொண்டு அதிலுள்ள சளக்கியவரசர்கள, டைய அரண்மனையை இடித்தெறிக் தான். இச்சண்டைகளிலெல்லாம் இவன் தன் தம்பியாகிய இராஜேந் திரதேவனென்பவனால் மிக்க உதவிபெற்று வந்தான். கடைசியாக இவ்விருவரும் சளக்கியருடன் சொப்பத்தில் போர் புரியும்போது, அச்சண்டையில் இராஜாதிராஜன் உயிரிழந்தான். இவ்வரசனுக்கு ஜயங்கொண்ட சோழனென்னும் பெயருமுண்டு. ஒன்பதாம் அதிகாரம். கி. பி. 10152-ல் இராஜாதிராஜனுக்குப் பிறகு, இராஜேந்திர தேவன் இராஜ்யம்பெற்றான். இவனுக்கு விஜயராஜேந்தி தேவனென் னும் பெயருண்டு என்பது , "ன்பு கல்லியாணபுரமும், கொல்லா புரமும் கொண்டரு ஆனைமேற்றுஞ்சியருளின பெருமாள் விஜய ராஜேந்திரதேவர்' என்று ஒரு சாஸனத்துக் கூறியிருப்பதால் விளங்கும். இவன், தன்றமையனைப்போலவே, தானும் பலநாடுகளைத் தன்னுற்றார்க்கு வழங்கின தாகக் கூறுகிறான். வழக்கம்போல, இவ்வாசனும் பட்டம்பெற்ற நாள்முதல் சாளு க்கியருடன் யுத்தஞ்செய்யத் தலைப்பட்டான். இவன் கொப்பத்துச் செய்த சண்டையில் இராஜா திராஜன் மடிந்தானென்று முன்னரே சொன்னோம். இப்போரினிறுதியில், இவன் கொல்லாபுரத்தைக்கைப் பற்றிக்கொண்டு அவ்விடத்து ஓர் ஐயஸ்தம்பம் நட்டான். விஜய Ep. An, Rep, for 1898-A.No. 5 of 1899.