பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். புரமும் கொல்லாபுரமும் கொண்டருளி யானைமேற்றுஞ்சியருளினபெரு மாள் விஜயராஜேந்திரதேவர்க்கு யாண்டுமூன்றவதி, காலதோஷ முண்டாய், ஊர் பயிரேற்றுகைக்குப் போனகப்பழநெல் விச்சும் நெல்லுங் கொள்கைக்கும், குலைகள் அட்டுகைக்கும், குரம்புகள் கொள்ளுகைக்கும் இத்தேவர் (ஆபத்சகாயேசுரர்) ஸ்ரீபண்டாரத்து நாங்கள் வாங்கின கொள்கையொன்றினாற் பொன்." என்று தஞ்சாவூர் ஜில்லாவில் ஆலங்குடிச் சாஸனமொன்று கூறுகின்றது. சோழசக்கரவர்த்திகள் அடிக்கடி செய்துவந்த யுத்தங்களால் பொக்கிஷங்கள் வறண்டு, வரி களும் உயர்ந்து, குடிகள் க்ஷாமத்துக்குட்படவேண்டி நேர்ந்ததாகத் தோன்றுகிறது. இராஜேந்திரதேவனுடன் இராஜூகசரி இராஜபஹேந்திரன் என் னும் சோழசக்கரவர்த்தி, சிலகாலம் அ1 சாண்டான. கலிங்கத்துப் பரணியில், "பனுவலுக்கு முதலாய வேத கான்கிற் பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கள் மனுவினுக்கு மும்மடிநான் மடியாஞ் சோழன் மதிக்குடைக்க முறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும்' என்றும், விக்கிரமசோழனுலாவில், “பாடரவத் தென்னங்க மேயாற்தப் பன்மணியா லாட வப் பாய லமைத்தோனும்." என்றும் புகழப்பட்ட அரசனிவனே இவ்வாசன் ஸ்ரீரங்கத்துக் கோயிலில் ஓர் பிராகாரத்தைக் சட்டிவைத்தா னென்றும், அதனால் அப்பிராகா' இராஜம) ஹந்திரன் திருவீதியென் னும் பெயர்பெற்றது சான்றும் "கோயிலொழுத" எனனும் வைஷ்ணவகிரந்தத்திலும் குரு பரம்பரையிலும் எழுதியிருக்கிறம், இவ்வாசனைக்குறித்து விசேஷ மாச ஒன்றுந்தெரியவில்லை.

  • See Ante. p. 21. t இராசபாரம்பரியம், பா.28,