பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். பத்தாம் அதிகாரம். வீரசோழியமென்னும் தமிழிலக்கியத்தில் "எல்லாவுலகு மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன்" *என்று குறிக்கப்பட்டிருக் கிற வீரராஜேந்திரனென்பவன் இராஜமஹேந்திரனுக்குப்பின் சோழ ராஜ்யாதிபதியானான். இவன் காலத்துக்குமுன் ஆரம்பித்த சாளுக்கிய யுத்தம் இன்னமும் முடிவுபெறவில்லை. இவன் ஆஹவமல்லன் மகன் விக்கிரமாதித்தனைக் கங்கபாடியினின்றும் துங்கபத்திரைக்கப்பால் துரத்திவிட்டு, இரண்டாமுறை சாளுக்கிய மஹாதண்டநாயகனாகிய, வனவாசியரசன் சாமுண்டராயனைக் கொன்று, இவன்மகன் இருகையன் மனைவி நாகலையென்பாளை மூக்கறுத்துத் திரும்பினான். பிறகு துங்கையும் பத்திரையும் கூடும் கூடலசங்கமத்து இன்னமொருகால் போர்கடக்க, அதில் சாளுக்கிய தண்டநாயகர்களிற் கேசவய்பனையும், மாரய்யனையும் வீரராஜேந்திரன் கொன்று, ஆஹவமல்லன் பாசறையை முற்றிப் பிடித்துக்கொண்டான். அப்பொழுது அவன் பட்டத்து யானையாகிய புஷ்பகப்பிடியும், அவன் மனைவியரும், வராகக்கொடியும் இவன் கையிலகப்பட்டுக்கொண்டன. இவ்வீராஜேந்திரனால் பொத்தப்பிநாட்டு அரசன் ஒருவனும், கோளராஜன் ஒருவனும் ஆயிக்கப்பட்டார்கள். தாராதேசத்து ஜன நாதன் என்பவனும் அவன் தம்பியும் இலனால் தோற்கப்பட்டார்கள். பாண்டியாடு மறுபடியும் இவனாற் கைக்கொள்ளப்பட்டது. தென்தேயத்துச் சண்டைகளெல்லாம் ஒருவாறு முடிந்து வரு கையில் அபஜயமடைந்த ஆஹவமல்லன் தன்கையால் வீராஜேந்தி) னுக்கு ஒரு கடிதமெழுதிவிடுத்துச் சண்டைக்குக் கூடலில்வந்தி சேரும்படி அழைத்தான். இக்கடிதத்தின் வேண்டுகோட்படி, வீர ராஜேந்திரன் மறுபடியும் கூடலுக்குத் தண்டெடுத்துச் சென்று, ஆஹவ மல்லனுக்காக ஒருமாத காலம் காத்திருந்து, அவன் வாராதிருக்கக்கண்டு நாட்டை ஆங்காங்குக்கொளுத்திவிட்டு, அவன் இராஜதானிகளிலொன் ' சந்திப்படலம்-எ.