பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உசு சோழவமிசசரித்திரச் சுருக்கம். ராகிய கம்பிலியைத் தீக்கிரையாக்கி, துங்கபத்திரைக் கரையில் கரடிக்கல் லெனுமிடத்தே ஒரு ஜயஸ்தம்பத்தையும் நாட்டிவைத்தான். இவ்வளவு தூரம் நடந்தபின், ஆஹவமல்லன் மகன் விக்கிரமாதித்தன் வந்து வீரராஜேந்திரனிடம் சரணமடைய, இரட்டபாடியை அவனுக்குக் கொடுத்து, குந்தள ராஜ்யத்துக்கு இளவரசுப்பட்டமும் கட்டி, தன் மகளையும் அவனுக்கு மணம்புரிவித்து வேங்கைநாடு நோக்கிச் சென்றான். அம்மண்டலத்தைத் தன்னுட்படுத்தக் கருதி, கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள விஜயவாடையில் சத்துருக்களை எதிர்த்து ஜயித்துக் கலிங்கமும் சக்கரக்கோட்டமும் பற்றினான். இவ்வாறு ஜயித்த நாடுகளை, முதற்குலோத்துங்கன் சிற்றப்பனாகிய வி ஜயாதித்தனை ஆளும்படி நியமித்துத் திரும்பினான். பதினெராம் அதிகாரம். வீராஜேந்திரனுக்குப்பின், அவன் மகனான அதிராஜேந்திரன் சோழசிம்மாசனம் ஏறினான். முன்னமே நாம் சொன்னபடி வேங்கிநாடு வீரராஜேந்திரனால் விஜயாதித்தனுக்குக் கொடுக்கப்படவே, அந்நாட்டு இளவரசனாகிய குலோத்துங்கன் நாடிழந்து துன்புற்றிருந்தான். அப்படியிருக்குநாளில் அதிராஜேந்திரன் என்னும் வன்மையற்ற சோழசக்கரவர்த்தி பட்டந்தரிக்கவே, அவனைப்பட்டத்தினின்றும் நீக்கித் தான் அரசனாகவேண்டும் என்னும் எண்ணம் குலோத்துங் கனுக்கு ஜனித்தது. அஃது உத்தேசமாய், மேனாட்டுச் சாளுக் கியனாகிய விக்கிரமாதித்தன் தம்பியான இரண்டாம் சோமீசுவரனுடன் சிநேகித்து, இருவருமாகச்சேர்ந்து, சோழராஜ்யத்தின்பேரில் படை யெடுத்துச்சென்று, அதிராஜேந்திரனைக்கொன்று, பாகேசரி இராஜேந்திர சோழ தேவனுக்கு தௌகித்திரபாத்தியங்கொண்டாடிக்கொண்டு, சோழராஜ்யத்துக்கு அதிபதி பானான். தெற்கே சோழநாட்டில் நிகழ்ந்த விஷடங்களை யெல்லாங் கேள்வியுற்று, தன் மைத்துனனைக்கொன்ற குலோத்துங்கனத் தண்டித்து வரவேண்டுமென்று, பெருத்தசேனை யொன்றைக்கொண்டு, சாளுக்கியவிக்கிரமாதித்தன் வந்து, குலோத்துங் கனால் தோற்கப்பட்டுத் திரும்பினான். குலோத்துங்கன் தந்தைவழியில்