பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். பதினான்காம் அதிகாரம். மூன்றாங்குலோத்துங்கன், இராஜா திராஜறுக்குப்பின் முடிசூட் டப்பட்டான். இவனுக்கு வீரராஜேந்திரன், திரிபுவனவீரதேவனென் னும் வேறுபெயர்களுமுள. இவன் மெய்க்கீர்த்தி “மதுரையும் ஈழமும் பாண்டியன் முடித்தலையுங்கொண்டருளிய கோப்பரகேசரி வர்மரான திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழதேவர்" என்று இவளை ச்சிறப்பிக்கும். இதன் உண்மையை யறிய முயலுவோம். பாண்டி நாடும் இன்னும் முன்னிலையை அடையவில்லை. பட்டத்தைக்குறித்தவிவாதம் மறுபடியும் நேர்ந்தது. 'தலசேகரனுக்குப் பின பட்டம்பெற்ற விக்கிரம பாண்டியனுக்கும் முற்கூறிய வீரபாண்டியனுக்கும்போருண்டாய், முன் னவன் வழக்கம்போலவே சோழரையும், பின்னவன் சிங்களவரையும் துணைவேண்டினார்கள். அங்ஙனமே, அவ்விருவரும் சோழராலும் சிங்களவராலும் உதவியும் பெற்றனர் இதில், குலோத்துங்கன் சிங் களவரை முறியடித்து வீரபாண்டியன் தலையின் மீது இருந்த முடியைப் பறித்து அவன்மக்களையும் அடக்கி, விக்கிரமபாண்டியனுக்குப் பாண்டி நாட்டைக்கொடுத்து மீண்டான். சில காலத்துக்கெல்லாம் வீரபாண்டி யன மறுபடியும் முரணத்தலைப் பட்டனன். நெட்ரிேலும் இவனுக்குக் குலோத்துங்கன சேனைகளால் தோல்வியேயுண்டாயிற்று. இந்தமுறை குலோத்துங்கன வீரபாண்டியனைக்கொன்றுவிட்டான். இப்போரிற் றான் வீரபாண்டியனுக்குத் துணையாகவந்த வீரசோழனையும் ஈழத் தரசனையும் குலோத்துங்கன வென்றிருக்கவேண்டும். மேற்கூறிய வெற்றிகளை உத்தேசித்தே முன்னர்க் குறித்த சிறுமெய்க்கீர்த்தியில் தன்னைப் புகழ்ந்து கொள்ளுகின்றான் . . வடக்கே காஞ்சீபுரத்தைக் காகதீயவமிசத்தாசனாகிய கணபதி யென்பானும் வேறு சிலவிடங்களை விசயகண்டகோ பாலனென்பான் ஒருவனும் பிடித்துக்கொண்டு ஆண்டுவந்தனர். தென்னாட்டு யுத்தங்கள் முடிந்ததும் குலோத்துங்கன் வடக்கேபடையெடுத்துச்சென்று கணபதி முதலானோரை மூட்டி நாட்டைத் தன்னதாக்கிக்கொண்டான். இவன்