பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சக சோழவமிசசரித்திரச்சுருக்கம். கரிகாலசோழ ஆடையூர் நாடாள்வான், சோமன் திருவண்ணாமலையுடை யானான குலோத்துங்க சோழ பிருதிகங்கன, சோழன் வரந்தருவானான் சோழேந்திரசிங்க பிருதிகங்கன் என்னும் இவ்வொன்பது சிற்றரசர்களும் கி. பி. 1178-ல் ஓர் நிபந்தஞ் செய்து கொண்டனர். அதன்படி, மேற் கூறிய பகைமை பாராட்டும் சிற்றரசர் மூவரும் இராஜதுரோகிகளாகி விட்டபடியால், அவர்களோடு தாங்கள் எதன்பொருட்டும் சேர்வதில்லை யென்றும், அவர்களோடு எழுத்து முதலியன எழுதப் பெறாவென்றும், எக்காலத்தும் சோழசக்கரவர்த்திக்கும் அவன் மகாசாமந்தனுக்கும் கீழ்ப்படியக் கடமைப்பட்டவராவோமென்றும் அவர்கள் பிரமாணம் செய்துகொண்டார்கள். - இவையெல்லாம் சோழராச்சியத்தின் வ. யின்மையை யறிவிக்கும் குறிகளென்பதற்கு ஐயமேயில்லை. இவ்வரசன் காலத்து, இவன் 24-ம் ஆண்டில் ஒரு க்ஷாமம் வந்ததென்றும் அப் போது “காசுக்கு உழக்கரிசிவிற்”ற தென்றும் திருவண்ணாமலையில் ஒரு சாஸனம் கூறுகிறது. பதினைந்தாம் அதிகாரம். குலோத்துங்கனுக்குப்பின் அவன் மகன் மூன்றாம் இராஜராஜன் சோமுசக்கரவாத்தியானான். இவன் காலத்தே சோழராச்சியம் மிகப்பார் திருந்தபோதிலும், சிற்றாசர்கள் பிராபல்ய மதிகரித்தது. இவர்களுட் சிலாது பலத்தாலும் உதவியாலுமே அரசன் தன்னாட்டை இழவாம விருக்கலாயிற்று. இராஜராஜன் முடிசூடியவாண்டிலே பாண்டி நாட்டில் முதன்மா வர்மன் சுந்தரபாண்டியன் பட்டந்தரித்தான் (கி.பி. 1216). இ. வரசன் மிக்க பலசாலி. சோழ இராச்சியத்தின் பலவீனத்தை அறிந்து அதனை ஜயிக்க எத்தனித்தான். இச்சுந்தரபாண்டியன் சாஸனங்கள். -

  • Ep. An. Rep for 1902-08. No, 536 of 1902. | Ep, An. Rep. for 1902-3, No. 506 of 1902.