பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம் அழித்தும், பெண்டுகளைப் பிடித்தும், கொள்ளைகொண்டும், சேந்தமங்க லத்திலே எடுத்து விடப்போகற அளவிலே, கோப்பெருஞ்சிங்கன் குலை ந்து, சோழச்சக்கரவர்த்தியை எழுந்தருளுவிக்கக் கடவதாக தேவனுக்கு விண்ணப்பஞ்செய்ய, இவர் விட்டு நமக்கும் ஆள்வாக்காட்டுகையாலே, சோழசக் காவர்த்தியை எழுந்தருளுவித்துக் கொடுபோந்து ராஜ்யத்தே புகவிட்டது."* என்று அக்காலத்து நடந்த சமாசாரங்களை விஸ்தார மாகத் திருவயிந்திரபுரத்துத் தேவநாயகப் பெருமாள் கோயிற் பிராகார த்து மேலைச்சுவரில் எழுதியிருக்கிறது. இவ்விரண்ட வது ஆபத்தினின்றும் தப்பி மறுபடியும் இராஜ்யம் பெற்று கி. பி. 1246-வரையில் பாஜராஜன் அரசாண்டான். பதினாறாம் அதிகாரம். மூன்றும் இராஜராஜன் விண் நட்டுக்கேகலும், அவன்மகனாகிய மூன்றாம் இராஜேந்திர கி. பி. 1246-ல் அரசனானான். இவன் தன் மாமனாகிய வீ.சே. மீசுவானைத் தன் காலில் வீரக்கழலைப்பூட்டும்படியான தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவந்ததாகவும், கோளபாண்டிய சக்கரவர்த்தி களை வென்றதாகவும் இடம்பும் பேசிக்கொள்வதினின்றும், இவன் தன் மாமன் முதலியவபோகம் விரோதித்துக்கொண்டானென்பது நிச்சய மாகப் புலப்படுகிறது. இவன் விஷய மிப்படி யிருக்க. கி. பி. 1251-ல் பட்டந்தரித்த ஜடாவர்ம்மன் சுந்தரபாண்டியன் மகாராஜாதிராஜன் என்னும் சக்கரவர்த்திப் பட்டந்தரித்து, சோழ வமிசமென்னும் மலைக்குத் தானோர் இடியேறு என்றும், கன்னாடக வரச னாகிய வீரசோமீசுவரனைத் தாத்தியடித்தவனென்றும், காடக தேசாதி பதிபாகிய கஜபதிக்கு - குளி காய்ச்சல் போன்றவனென்றும், விஜய கண்டகோபாலன் என்னும் காட்டுக்குத் தீயென்றும், காஞ்சிபுரத்ததி பதியான கணபதியாகிய மானுக்கு ஓர் புலியென்றும் தன்னப் புகழ்ந்து கொள்ளுகிான். இதற்கேற்ப இவன் சாஸனங்கள் இவன் இராஜ்ய

  • Ep. Ind. Vol. VII. pp. 167-8. k Ep. Carn. Vol. VII. Tumkur District. No. 45. Gubbi Tuluk.